உல்லாசத்திற்கு பெண்களை கேட்டு தொந்தரவு..? சினிமா தயாரிப்பாளர் கொலை...! குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்

பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் கணேசனுக்கும், சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரனுக்கும் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 

Police arrested the accused in the film producer murder case in Chennai

சினிமா தயாரிப்பாளர்கொலை

சினிமாத்துறையைச் சார்ந்த தயாரிப்பாளர் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி தெருவில் வீசப்பட்ட நிகழ்வு  திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து யார் அந்த தயாரிப்பாளர் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இந்தநிலையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் பாஸ்கரன்(67) இவர் ரியல் எஸ்டேட் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 1990ஆம் ஆண்டில்  லக்‌ஷ்மி கரண் எண்டர்பிரைசஸ் என்கிற பட நிறுவனத்தை தொடங்கி 1997 ஆம் ஆண்டு முதல் படங்களை தயாரித்துள்ளார். ராம்கி நடித்த சாம்ராட்(1997), மற்றும் ஒயிட் ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதன் பின்னர் சினிமா தயாரிப்பு வேலைகளில் ஈடுபடவில்லை என தெரிகிறது. இந்தநிலையிலை நேற்று இரவு பாஸ்கரன் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். மேலும் அவரது செல்போனையும் தொடர்பு கொள்ளமுடியாத நிலை இருந்துள்ளது. இதனையடுத்து  அவருடைய மகன் தந்தை ஓட்டி வந்த காரின்  ஜிபிஎஸ்ஐ வைத்து சோதனை செய்தபோது, அது விருகம்பாக்கம் ஐஏஎஸ் ஐபிஎஸ் குடியிருப்பு அருகே இருப்பது தெரியவந்தது. ஆனால், காரில்  தந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தந்தையை காணவில்லை என புகார் அளித்தார். 

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளிக்க எம்எல்ஏக்கு ரூ. 3கோடி..? கொடுத்தனுப்பிய பணம் திடீர் மாயம்..! காணாமல் போனது எப்படி..?

Police arrested the accused in the film producer murder case in Chennai

இதனிடையே நேற்று காலை 6 மணி அளவில் சின்மயா நகர் விருகம்பாக்கம் நெற்குன்றம் சாலையில் துப்புரவு தொழிலாளர்கள் சாலையோரம் கிடந்த பாலீதீன் மூட்டையை பார்த்தபோது, அதில் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கை கால்கள் கட்டப்பட்டு வாயில் துணியுடன் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காணாமல் போனவர் என புகார் அளிக்கப்பட்ட பாஸ்கரன் தான் கொலையானவர் என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். பாஸ்கரனை கொலை செய்த கணேசன் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.போலீஸ் விசாரணையில், கணேசன் கலந்த சில வருடங்களாகவே பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. 

சசிகலாவின் ஒற்றை வார்த்தை டுவீட் ஒற்றுமை ..! ஆர்.பி.உதயகுமார் கொடுத்த பதிலடி

Police arrested the accused in the film producer murder case in Chennai

கடந்த இரண்டு வருடங்களாகவே கணேசனுடன் பாஸ்கருக்கு தொடர்பு ஏற்பட்டு அடிக்கடி வந்து செல்வதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்றும் இதேபோன்று பாஸ்கரன் கணேசனை தேடி வந்திருக்கிறார். அப்போது பாலியல் தேவைகளுக்காக குறிப்பிட்ட இரண்டு பெண்களை பாஸ்கரன் கேட்டதாகவும் அதற்கு கணேசன் அவர்கள் வர தாமதமாகும் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரன் கணேசனை கோபத்தில் திட்டியுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கணேசன் ஆத்திரத்தில் பாஸ்கரனை கீழே தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டு மயங்கி இருக்கிறார். அதன் பின்னர் கணேசன் பாஸ்கரனை அருகே இருந்த தூணில் கட்டி போட்டு இருக்கிறார். அதன் பின்னர் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். இதில் உயிரிழந்த பாஸ்கரனை கை, கால்களை கட்டி வாயில் துணியை கட்டி பாலித்தீன் கவரில் பேக் செய்து சாலை ஓரம் வீசி சென்றதாகவும் கணேசன் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவத்தில் ஒரே ஒருவர் தான் கொலை குற்றவாளி எனுவும், கும்பல்களாக சேர்ந்து யாரும் இந்த கொலையை செய்யவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள்...! என்ன பதிவிட்டுள்ளார்கள் தெரியுமா..?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios