செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள்...! என்ன பதிவிட்டுள்ளார்கள் தெரியுமா..?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை என பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் டுவிட்டர் பக்கம் முடக்கம்
நவீன உலகத்திற்கு ஏற்ப மனிதர்களும் தங்களை அப்பேட் செய்து வருகிறார்கள், அந்த வகையில் டுவிட்டர் கணக்கை உலகமுழுவதும் பல லட்சம் கோடி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். நல்லது ஒன்று இருந்தால் அதில் தீயதும் கண்டிப்பாக இருக்கும் அப்படித்தான் டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்களால் முடக்கப்படும் செய்தி அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள் போன்றோரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்வது வாடிக்கையாகி வருகிறது. அந்தவகையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் தற்போது முடக்கியுள்ளனர். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பக்கத்தை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
சசிகலாவின் ஒற்றை வார்த்தை டுவீட் ஒற்றுமை ..! ஆர்.பி.உதயகுமார் கொடுத்த பதிலடி
கிரிப்டோவுக்கு ஆதரவாக கருத்து
இந்த நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் அவரது கணக்கை ஹேக் செய்து, வேரியோரியஸ் என பெயர் மாற்றம் செய்துள்ளனர். டுவிட்டரை ஹேக் செய்தவர்கள் அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை என்று பதிவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்த திமுக பிரமுகரின் ஒருவரின் புகைப்படம் இணைத்துள்ளனர்.
மேலும் கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புவதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்