ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளிக்க எம்எல்ஏக்கு ரூ. 3கோடி..? கொடுத்தனுப்பிய பணம் திடீர் மாயம்..! காணாமல் போனது எப்படி..?

அதிமுகவில்  ஒற்றை தலைமை குழப்பம் ஏற்பட்ட நிலையில்,  ஓபிஎஸ்க்கு ஆதரவளிக்க உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனுக்காக பேரம் பேசப்பட்ட மூன்று கோடி மாயமானதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For supporting the OPS team the MLA took Rs 3 crore was reported stolen by the driver

அதிமுக ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்கள் தரப்பு ஆதரவை பலப்படுத்த தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்தநிலையில் ஓபிஎஸ் அணியினர் அதிமுக நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து பேரம்பேசுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புகார் தெரிவித்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பனும் ஓபிஎஸ்க்கு கடந்த மாதம் ஆதரவளித்திருந்தார். இதற்காக 3 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த பணம் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த நாராயணன் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். மேலும் அவரது மகன் ரவீந்திரநாத்தின் நெருங்கிய நண்பர்.இதன் காரணமாகவே தான் வகித்து வந்த தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பதவியை நாராயணனுக்கு கொடுத்தார் ரவீந்திரநாத்,

For supporting the OPS team the MLA took Rs 3 crore was reported stolen by the driver

நாராயணன் நாள்தோறும் ஓ. பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு சென்று வரும் வழக்கமுடையவர். இந்த நிலையில் நாராயணனின் கார் ஓட்டுனரான ஸ்ரீதர் என்பவரை கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் காணவில்லை எனவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என ஆகஸ்டு 27ம் தேதி இரவு 10 மணிக்கு அவரது மனைவி கெங்கம்மாள் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது கார் ஓட்டுனரான ஸ்ரீதர் தன்னிடமிருந்து 50 லட்சம் ரூபாய் திருடிச் சென்று விட்டதாக நாராயணன் கடந்த ஆகஸ்டு 29 ம் தேதி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இரட்டை இலை முடக்கம்; அதிமுக தொண்டர்கள் அய்யோ பாவம்..ஓபிஎஸ் Vs எடப்பாடியை அலறவிடும் முன்னாள் பிரமுகர் !

எம்எல்ஏக்கு சென்ற பணம் எங்கே..?

பெரிய இடத்து விவகாரம் என்பதால் காவல்துறையினர்,இந்த விவகாரம் தொடர்பாக கடுகளவும் கசிய விடாமல் பார்த்துக் கொண்டனர். இந்த நிலையில் இருவரும் அளித்த புகார் மனுக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பாக ஓபிஎஸ் வட்டாரத்தில் மிகவும் முக்கியமான நபர்களிடம் விசாரித்த போது, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனை தன்னுடைய அணியில் இணைப்பதற்காக ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் மூன்று கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், அதில் ஒரு கோடி ரூபாய் முதல் தவணையாக கொடுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது தவணையாக கொடுப்பதற்கு நாராயணன் மூலமாக கொடுத்து அனுப்பப்பட்ட இரண்டு கோடி ரூபாயைத் தான் அவரது ஓட்டுநர் ஸ்ரீதர் திருடிக் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

For supporting the OPS team the MLA took Rs 3 crore was reported stolen by the driver

மற்றொரு தரப்பில் கடந்த 27ஆம் தேதி ஐயப்பன் சென்னையில் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவளித்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு முக்கிய புள்ளி 3 கோடி ரூபாய் பணத்தை ஐயப்பனுக்கு கொடுப்பதற்காக ஓ பன்னீர்செல்வத்திடம் கொடுத்ததாகவும்,அந்தப் பணத்தை உசிலம்பட்டிக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் நாராயணனிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. நாராயணன் உசிலம்பட்டி வந்த பிறகு காரை விட்டு இறங்கியவுடன் அவரது கார் ஓட்டுநர் பணத்துடன் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் ரெடி.. ராகுல் காந்தியும் ரெடி.! ஆட்சி மாற்றம் நிச்சயம் - கே.எஸ் அழகிரி அதிரடி !

காவல்நிலையத்தில் புகார்

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக பணத்தை ஒப்படைக்கும் பொறுப்பிற்காக உசிலம்பட்டியில் காத்திருந்த சையதுகானின் காரில் நாராயணன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு வந்து, அவரிடம் நிலைமையை விளக்கி கூறியதாகவும் அதைக் கேட்ட ஓ.பன்னீர்செல்வம் சையதுகானை கடுமையாக திட்டியதாகவும், இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே உள்ளூரிலே இருந்த போதும் பொதுக்குழு வழக்கு தீர்ப்பு உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு செல்லாமல் கடந்த ஒரு வாரமாக சையதுகான் விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

For supporting the OPS team the MLA took Rs 3 crore was reported stolen by the driver

ஸ்ரீதரை பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால்,வேறு வழி இல்லாமல் 50 லட்சம் ரூபாயைத் திருடிக் கொண்டு சென்று விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு கோடி, மூன்று கோடி என்று புகார் அளித்தால் பெரும் சர்ச்சை கிளம்பி விடும் என்று 50 லட்சம் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். பணம் கிடைக்கும் என்று நம்பி அணி மாறிய ஐயப்பனின் நிலை தற்போது பரிதாபமாக உள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

படிப்பில் மகளை முந்திய மாணவன்... ஆத்திரத்தில் மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை..? மாணவியின் தாய் கைது...

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios