ஆட்சியர் பெயரில் வாட்ஸ் அப்பில் பணம் கேட்டு மெசேஜ்...! வடமாநில கும்பலில் தில்லாலங்கடி வேலை

தேனி மாவட்ட ஆட்சி தலைவர் பெயரில் போலி வாட்ஸ் அப் எண் உருவாக்கப்பட்டு அந்த எண்ணில் இருந்து பொதுமக்களுக்கு மெசேஜ் மூலம் பணம் கேட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Police are searching for those who sent fake messages as if the Theni District Collector was asking for money

நூதன மோசடி

மக்களை ஏமாற்றி  பணம் பறிக்கும் கும்பல் தங்களது டெக்னிக்கை வலுப்படுத்திக்கொண்டே வருகிறது. காவல்துறை அதிகாரிகள் 10 அடி பாய்ந்தால் மோசடிக்காரர்கள் 100 அடி பாயும் நிலை தன் உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக டெக்னிக்கை உருவாக்கி வருகிறார்கள். நவீன தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்பட தங்களையும் அப்டேட் செய்து வருகிறார்கள் மோசடிவாதிகள், அந்த வகையில் பேஸ்புக்கில் உறவினர்கள்,நண்பர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி செய்த மோசடி கும்பல் தற்போது வாட்ஸ் எண்ணில் இருந்தும் பணம் பறித்து வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் படத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் நலம் விசாரிப்பது போல் வட மாநில கும்பல் பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வி.முரளீதரன், இ.ஆ.ப., அவர்களின் புகைப்படத்தினை முகப்பு படமாக எண்ணிலிருந்து, அலுவலர்கள் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. கொண்டு உட்பட பல 8088765749 என்ற கைபேசி நபர்களுக்கு வாட்ஸ்அப்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் புகைப்படத்தினை முகப்பு படமாக எண்ணிலிருந்து, அலுவலர்கள் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.  இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அலுவலர்கள் பொதுமக்களை நலம் விசாரிப்பது போல் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

Police are searching for those who sent fake messages as if the Theni District Collector was asking for money

ஆட்சியர் பெயரில் மோசடி

இதனை கண்டு, சந்தேகம் அடைந்த அலுவலர்கள், அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, அவர் கன்னடம் மற்றும் இந்தியில் தெளிவற்று பேசியுள்ளார். இக்குறுஞ்செய்தியானது தவறான செயல்களை செய்திடும் நோக்கத்தில் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கவனத்திற்கு அலுவலர்கள் எடுத்து சென்றதின் பெயரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உடனடியாக இந்த தவறான செயலினை தடுத்திடும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன்பேரில், சைபர் கிரைம் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, மேற்காணும் எண்ணிலிருந்தோ அல்லது வேறு எண்ணிலிருந்தோ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பெயரில் தவறான செய்திகள் மற்றும் தவறான வேண்டுகோள்கள் வரப்பெற்றால் பொது மக்கள் நம்ப வேண்டாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வி.முரளீதரன்,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

காதலி ஆபாச வீடியோ லைவ்.. நண்பனுடன் சேர்ந்து காதலியை பலாத்காரம் செய்த கொடூர சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios