அரக்கோணத்தில் பா.ம.க. மகளிர் அணி தலைவி கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரக்கோணத்தில் பா.ம.க. மகளிர் அணி தலைவி கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்னகைனுாரைச் சேர்ந்தவர் நிர்மலா (42). இவர் அரக்கோணம் நகர பா.ம.க. மகளிர் அணி தலைவியாக இருந்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்டதால் தாய் படவேட்டம்மாளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தனது தாய் வீட்டில் படுத்து தூங்கினார். விடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து இருவரும் வெளியே வரவில்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். 

அப்போது, நிர்மலா தலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரது தலையில் அம்மிக் கல்லை போட்டு கொடூர கொலை செய்துள்ளது. அவரது தாயாரும் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த படவேட்டம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நிர்மலாவின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க, 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது