ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத்தை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. பேசிக் கொண்டு இருக்கும் போதே அமைச்சரின் மகனை தாக்கி! பேரனின் வாயை உடைத்த மர்ம கும்பல்!
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஈஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க;- கண்ணீர் விட வைக்கும் வெங்காயம் விலை.. உச்சத்தை தொட்ட இஞ்சி.. கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன?
இந்நிலையில் ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தினாலும் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.