கண்ணீர் விட வைக்கும் வெங்காயம் விலை.. உச்சத்தை தொட்ட இஞ்சி.. கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன?
சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த சந்தைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் வெங்காயம் மற்றும் இஞ்சு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 48 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 54 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நெல்லிக்காய் ஒரு கிலோ 102 ரூபாய்க்கும், வாழைப் பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 64 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், காலிஃபிளவர் ஒரு கிலோ 20-க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 240 ரூபாய், மாங்காய் 75 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.