சென்னையில் அதிர்ச்சி.. பேசிக் கொண்டு இருக்கும் போதே அமைச்சரின் மகனை தாக்கி! பேரனின் வாயை உடைத்த மர்ம கும்பல்!
சென்னை தியாகராயநகரில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மகன் மற்றும் பேரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். இவரது மகன் ரமேஷ் மற்றும் அவரது பேரன் கதிர் ஆகியோர் நேற்று இரவு தியாகராயநகரில் அமைந்துள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்ப்பதற்காக வந்துள்ளனர்.
அப்போது பாடம் ஓடிக்கொண்டிருந்த போது பின் சீட்டில் அமர்ந்து கொண்டிருந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் வீசில் அடித்துக்கொண்டு ஆபாச வார்தைகளால் கூச்சலிட்டனர். இதனை கண்டித்த அமைச்சரின் மகன் மற்றும் பேரன் மீது திடீரென தாக்குதல் நடத்திவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் காயமடைந்த இருவரும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திரையங்கிற்கு நேரில் வந்து அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.