பிரபல நடிகை பட்டப்பகலில் சுட்டுக் கொலை! கணவனுக்கு போலீஸ் வலை!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 10, Aug 2018, 12:22 PM IST
Pakistani actress and singer Reshma shot dead by husband
Highlights

பிரபல நடிகையை பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்த அவரது கணவனை போலீசார் தேடி வருகின்றனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வசித்து வந்தவர் ரேஷ்மா. மேடை நடிகையாக தனது வாழ்வை தொடங்கிய இவர் சினிமாவில் நடித்து பெயர் பெற்றார்.

பிரபல நடிகையை பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்த அவரது கணவனை போலீசார் தேடி வருகின்றனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வசித்து வந்தவர் ரேஷ்மா. மேடை நடிகையாக தனது வாழ்வை தொடங்கிய இவர் சினிமாவில் நடித்து பெயர் பெற்றார். மேலும் மேடை பாடகியாகவும் ரேஷ்மா இருந்து வந்தார். இவரை பிரபல தொழில் அதிபர் ஃபவத் கான் என்பவர் 4வதாக திருமணம் செய்து கொண்டார். தம்பதிகள் இருவரும் பெஷாவரில் வசித்து வந்தனர். ஆனால் ஃபவத் கான் – ரேஷ்மா இடையே சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து மோதல் ஏற்பட்டுள்ளது.

ரேஷ்மாவை சினிமாவில் நடிக்க கூடாது என்று ஃபவத் கான் மிரட்டியுள்ளார். இதனால் அவருடன் சண்டை போட்டுவிட்டு ரேஷ்மா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் திடீரென பவத் கான் ரேஷ்மாவின் தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று ரேஷ்மாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவரது குடும்பத்தினருடன் பவத் கான் சண்டையிட்டுள்ளார். ஆனால் ஃபவத் கானுடன் ரேஷ்மாவை அனுப்ப அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். மேலும் ரேஷ்மாவும் தனது கணவருடன் செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பவத் கான் தான் கையோடு கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி ரேஷ்மாவை நோக்கி சுட்டுள்ளார். இதில் மார்பில் குண்டு பாய்ந்த ரேஷ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நடப்பது என்ன என்பதை ரேஷ்மா குடும்பத்தினர் உணரும் முன்னரே பவத் கான் அங்கிருந்து தப்பியுள்ளனார். ரேஷ்மாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பவத் கானை தேடிவருகின்றனர். தொடர்ந்து நடிக்க அனுமதிப்பதாக கூறியே பவத் கான் ரேஷ்மாவை திருமணம் செய்ததாகவும், ஆனால் திருமணத்திற்கு பிறகு ரேஷ்மா நடிக்க கூடாது என்று பவத் கான் தடுத்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும் ரேஷ்மா மீது கொண்ட சந்தேகம் காரணமாக அடித்து துன்புறுத்தியதாகவும் இதனால் தான் ரேஷ்மா தங்கள் வீட்டுக்கு வந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொடூரமாக தனது சகோதரியை கொலை செய்த பவத் கானை கைது செய்ய வேண்டும் என்றுரேஷ்மாவின் சகோதரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

loader