கள்ளக் காதலனுடனான உல்லாச வாழ்க்கை பாதித்ததால் குழப்பத்தில் இருந்த அபிராமி தனது கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக் காதலன் சுந்தரத்துடன்  தனது புதிய வாழ்க்கையை தொடங்க ப்ளான் போட்ட அபிராமி டீ யில் விஷத்தைக் கலந்து கொடு தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பித்து சென்ற அபிராமியை கள்ளக் காதலனின் உதவியால்  நாகர்கோவிலில்  வைத்து கைது செய்து chennai புழல் சிறையில் அடைத்துள்ளனர். இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை கொன்ற சம்பவம் அடங்குவதற்குள் மேலும் இதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது

சென்னை அண்ணா நகரில் குடியிருக்கும் பேராசிரியை ஒருவர், அபிராமியைப்போலவே தான் பெற்ற இரண்டு 
குழந்தைகளுக்கும் மயக்க மருந்து கொடுத்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  சென்னை, அண்ணாநகர் பகுதியில் குடியிருப்பவர் குறிப்பிடப்பட்ட அந்த பேராசிரியை. அவருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கும்  பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் நீண்ட காலமாக தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. 

மனைவியின் கள்ளத் தொடர்பை அறிந்த பேராசிரியையின் கணவர், அவரை கண்டித்துள்ளார்.  ஆனால், அந்த பேராசிரியையோ  கேட்டதாக தெரியவில்லை. 

இந்த நிலையில் பேராசிரியையின் கணவர், போலீசில் புகார் கூறியுள்ளார். அதில் குன்றத்தூர் அபிராமியைப் போல இரண்டு பெண்  குழந்தைகளுக்கு பேராசிரியை மயக்க மருந்து கொடுத்ததாக புகார் கூறினார். மேலும் மனைவியிடம் இருந்து தனது இரண்டு  குழந்தைகளையும் மீட்டுள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து பேராசிரியையிடமும், ரியல் எஸ்டேட் அதிபரிடமும் போலீசார் விசாரணை 
நடத்தி வருகின்றனர். 

இது குறித்து போலீசார் ஒருவர், பேராசிரியையின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்து வருவதாகவும், இவர்கள் காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும் கூறினார். பேராசிரியையின் தங்கையின் மூலம்தான் ரியல் எஸ்டேட் அதிபர் அறிமுகமாகி 
உள்ளார். 

தற்போது, பேராசிரியைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார். குன்றத்தூர் அபிராமி விவகாரம் போல் மாறுவதற்கு முன் இந்த சம்பவம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.