கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியர் அந்தோணிதாஸ், தன் மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா மற்றும் தனது அம்மா புவனேஸ்வரி ஆகிய நால்வருக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

உயிரிழந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி கருமத்தம்பட்டி போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில்,‘இந்த வீடு ஆசீர்வதிக்கப்பட்ட வீடு’ எ 12 வருடங்கள் முதுகுவலியால் அவஸ்தைப்பட்டு வந்ததாகவும், குடும்பத்தினரை இந்த உலகத்தில் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாததாலும், இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொன்ன அவர், ஆவியாக வந்து நாங்கள் யாருக்கும் தொந்தரவு தரமாட்டோம் என்றும் எழுதியிருக்கிறார்.