திருப்பத்தூர் அருகே 65 வயது மூதாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. அவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் மனநலம் பாதிக்கப்பட்டு தாயுடன் வாழ்ந்து வருகிறார். மூதாட்டி தனது வீட்டையொட்டி பெட்டிக் கடை வைத்துள்ளார்.

இந்நிலையில், ஆரிப்கான் நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராகுல் (30). மது போதையில் தனது தந்தையுடன் தகராறு செய்துள்ளார். இதனால் அவரை வீட்டில் தனி அறையில் தந்தை பூட்டி வைத்து உள்ளார். எனினும், ராகுல் நள்ளிரவு ஒரு மணியளவில் அறையில் உள்ள ஜன்னலை உடைத்து வெளியே வந்துள்ளார். பின்னர் 65 வயது மூதாட்டி வீட்டிற்குச் சென்று ஊறுகாய் வாங்குவது போல சென்று மூதாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார். 

இதனையடுத்து, கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு மூதாட்டி அலறியதால் அக்கம் பக்கத்தினர் குவிந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராகுலை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். ராகுல் மீது ஏற்கனவே கொலை மற்றும் பலாத்காரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தற்போது தான் ஜாமீனில் வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. திருப்பத்தூரில் மூதாட்டியை இளைஞர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.