பாபநாசம் அருகே கூலி வேலைக்கு சென்று திரும்பிய 65 வயது மூதாட்டியை, குடிபோதையில் இருந்த 46 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்துள்ள உள்ளிக்கடை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் வைரக்கண்ணு. இவரது மனைவி பக்கிரியம்மாள்(65). இவர் கணவர் இறந்துவிட்டார். இவரது மகன் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் தாய் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் மருமகள் சுகந்தி தனது தாய் வீட்டிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.

பக்கிரியம்மாள் தனது வீட்டிலிருந்து அய்யம்பேட்டை பகுதிக்கு நடந்து சென்று கூலி வேலை செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவது வழக்கம். அதன்படி வேலைக்கு சென்றுவிட்டு உள்ளிக்கடை சாலை பகுதியில் பக்கிரியம்மாள் நடந்து வந்தார். அப்போது அதே வழியாக குடிபோதையில் வந்த உள்ளிக்கடை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மும்மூர்த்தி (46) என்ற நபர் மூதாட்டி பக்கிரியம்மாளை தாக்கி விடாமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து ஒரு வழியாக வீட்டிற்கு வந்த பக்கிரியம்மாள் நடந்த சம்பவத்தை மருமகளிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி மருமகள் சுகந்தி மாமியாரை அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து மூதாட்டியை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் மும்மூர்த்தியை கைது செய்தனர். பின்னர் தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மூதாட்டியை 46 வயது நபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.