அரசு அலுவலகங்களில், தனியார் அலுவலகங்களில் (கால் சென்டர்) நடப்பதை விட மோசமாக அரங்கேறுகிறது. உயர் அதிகாரிகள், தனக்கு கீழ் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் நிகழ்வுகளும் அரங்கேறுகிறது. தற்போது அப்படியான ஒரு நிகழ்வு அரசு அலுவலகத்தில் நடந்துள்ளது.

பரமக்குடி அருகே சத்திரக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில், வேலை மின்பாதை ஆய்வாளர் நாகராஜ். அந்த ஆபீசுக்கு ஒரு துப்புரவு பெண் ஊழியரின் இடுப்பை வளைத்து, கட்டிப்பிடித்து செக்ஸ் சில்மிஷம் செய்யும் வீடியோ ஒன்று வாட்ஸ்அப்-ல் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் முதலில் இடுப்பை பிடித்து கொள்கிறார் நாகராஜ், அதற்கு பிறகு கட்டிப்பிடிக்கிறார். இதை இன்னொரு ஊழியரை தனது செல்போனில் வீடியோ எடுக்க சொல்ல, அந்த ஊழியரும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் வீடியோ எடுக்கிறார்.  

அப்போது அந்த பெண், விடு என்னை.. விடு என்னை.. என்று சொன்னாலும், நாகராஜ் விடவில்லை.. திரும்ப திரும்ப கட்டிப்பிடிக்கிறார். அப்போது போட்டோ எடுய்யா.. போட்டோ எடுய்யா என்று நாகராஜ் சொல்ல, அந்த பெண்ணோ போட்டோவும் "வேணாம், ஒரு மயிரும் வேணாம்.. அசிங்கமா கேட்டுட போறேன் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். போட்டோ எடுத்தாச்சு என்று மற்றொரு ஊழியர் சொல்லவும், திரும்பவும் போய் அந்த பெண்ணை பின்புறமிருந்து அலேக்காக கட்டி தூக்குகிறார் செக்ஸ் மன்னன் நாகராஜ். 

இந்த வீடியோ பார்க்கும்போது இது முதல்முறையாக,  நடப்பது போல தெரியவில்லை, இப்படி ஒரு பெண்ணை உரிமையாக கட்டிப்பதாக தெரியவில்லை.  அதேபோல, அந்த பெண்  போட்டோ வேண்டாம் என சொல்கிறாரே தவிர கட்டிப்பிடிப்பதை கண்டிக்கவில்லை. 

இப்படி ஒரு கேவலமான  சம்பவம் ஒரு அரசு அலுவலகத்தில் நடந்துள்ளது.. சம்பவத்தை அரங்கேற்றியது அதிகாரி  நாகராஜ், அவரது செக்ஸ் சில்மிஷத்துக்கு உடந்தையாக இருந்ததும் இன்னொரு அரசு ஊழியர் என்பது தான் கொடுமை.