கடலூர் மாவட்டம்  நெய்வேலி மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ளது அரிமா மளிகை. நேற்று இரவு இந்த கடையின் ஓட்டை உடைத்து உள்ளே சென்று திருடும்போது பணம் எதுவும் கிடைக்காததால் திருடன் கடும் ஏமாற்றமடைந்தான்.

 திருடன். பணம் கிடைக்காத கோபத்தில் கடையிலிருந்த  பொருட்களை உடைத்து  சேதபடுத்திய திருடன் கடையின்  உரிமையாளரை திட்டி கடிதம் எழுதியுள்ளான்.

அதில் உயிரைப் பணயம் வைச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவ தொடச்சு வைச்சு என்னை ஏமாற்றலாமா..அதுக்குத்தான் இந்த குரங்கு வேலை என எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இன்று காலை கடையை திறந்ததும் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் இதுகுறித்து மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.