Asianet News TamilAsianet News Tamil

நிர்மலாதேவியை திரும்ப திரும்ப தொந்தரவு பண்றாங்க வக்கீல் பரபரப்பு... மல்லிகைப்பூ, குங்குமம் கலக்கலாக வந்து பேட்டி

ஜாமீனில் வெளியான பேராசிரியை நிர்மலாதேவியை  ஏன் போலீஸ் தேட வேண்டும்? திரும்ப திரும்ப ஏன் தொந்தரவு செய்யணும்?  வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Nirmaladevi Exclusive interview
Author
Chennai, First Published Apr 17, 2019, 4:35 PM IST

ஜாமீனில் வெளியான பேராசிரியை நிர்மலாதேவியை  ஏன் போலீஸ் தேட வேண்டும்? திரும்ப திரும்ப ஏன் தொந்தரவு செய்யணும்?  வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கல்லூரி மாணவிகளை பெரும்புள்ளிகளின் கட்டிலுக்கு விருந்தளிக்க முயன்ற பேராசிரியை நிர்மலாதேவி பல மாத சிறை வாசத்துக்குப் பின் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக ரிலீஸ் ஆனார்.  ஜாமீன் வழங்கும்போது, ஊடகங்களுக்கு அவர் எந்தபேட்டியும் தரக்கூடாது என்று நிபந்தனையும் சேர்த்து வழங்கப்பட்டது. அதேபோல  நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் உள்ளது.

அதேபோல பேராசிரியை நிர்மலா தேவி பற்றிய செய்திகள் புலனாய்வு இதழ் ஒன்றில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே நிர்மலாதேவி நேரில் ஆஜராகி பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். 

Nirmaladevi Exclusive interview

இருந்தாலும், அவரிடம் மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வேண்டி உள்ளதால் வருகிற 22-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் அறையில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். 

இந்த நிலையில், இந்நிலையில், மதுரையில் உள்ள தனது அலுவலகத்தில், நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மல்லிகைப்பூ, குங்குமம், என மங்களகரமாக வந்த நிர்மலாதேவி அவரது வக்கீல் பசுபதி பாண்டியன் பல்வேறு புகார்களை அடுக்கினார். 

அதில், நிர்மலா தேவி இப்போது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். ஆனால் அவரை ஏன் போலீஸ் தேட வேண்டும்? அவங்க என்ன தேடப்படும் கொலைக் குற்றவாளியா? பொள்ளாச்சியில செக்ஸ் கொடுமை நடந்துச்சே இதுவரைக்கும் யாரையாவது கைது செய்தாங்களா? 

Nirmaladevi Exclusive interview

அதையெல்லாம் விட்டுட்டு திரும்ப திரும்ப நிர்மலா தேவியை தொந்தரவு செய்தால் என்ன அர்த்தம்? இதில் ஏதோ மர்மமாக இருக்கிறது. நிர்மலா தேவியை ஏன் தொந்தரவு பண்ணனும்? அதையும் அவங்கதான் சொல்லணும். இந்த விவகாரத்திலிருந்து யாருமே தப்பிக்க முடியாது. நிர்மலாதேவிக்கு தொடர்ந்து தொந்தரவு  கொடுப்பவர்கள் யாருமே தப்பிக்க முடியாது.

ஜாமீன் கிடைச்சும் வெளியே வந்து கொஞ்சம் நாலு தான் ஆச்சி, ஜெயில்லயும் சொந்தக்காரங்க யாருமே வந்து பாக்கல. இப்பவும் யாரும் வரல. ஆனா மத்தவங்க ஏன் நிர்மலாதேவியை பார்த்து  பயப்படுறாங்க, மடியில கனமில்ல வழியில பயமில்லைன்னு இருக்க வேண்டியதுதானே? 22ஆம் தேதி, நீதிபதிகிட்ட அனுமதி கிடைத்த பிறகு ஊடகங்களுக்கு இது பற்றியெல்லாம் நிர்மலா தேவி சொல்லுவாங்க எனக் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios