திருமணமான மூன்றாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஆற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  தாய் வீட்டிற்கு வந்திருந்த நிலையில்  அந்தப்பெண் இந்த கோர முடிவு எடுத்துள்ளார் .  ஆற்காடு அருகே சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் , இவரது மகள் திவ்யா 21 வயது ,  ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் . இந்நிலையில் சென்னை  திருநின்றவூரைச் சேர்ந்த காவலர் ராகவேந்திரன் என்பவருடன் கடந்த 7ஆம் தேதி  பெற்றோர்களின் ஏற்பாட்டின் பேரில் திருமணம் நடந்தது .

திருமணமாகி மூன்று நாட்கள்  மட்டுமே ஆன நிலையில் திவ்யா நேற்று ராகவேந்திரனுடன் சக்கரமல்லூர் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார் ,  ஊரிலிருந்து வந்தவுடன் தாய் தந்தை உற்றார் உறவினர்களுடன்  மகிழ்ச்சியாக பேசி சிரித்த திவ்யா சிறிது நேரம் ஒய்வெடுப்பதாக கூறி தனி அறைக்கு சென்றார் ,  உள்ளே சென்று கதவை தாழிட்டா அவர் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை ,  இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை தட்டி அழைத்தனர் ,  ஆனால் கதவு திறக்கப்படவில்லை திவ்யாவின் குரலும் கேட்கவில்லை,   இதனால் பதட்டம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே நுழைந்த பார்த்தபோது திவ்யா தூக்கில் பிணமாக தொங்கினார் .

 

திவ்யாவின்  கோலத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர் ,  இது ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது ,  தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் திருமணமான 3 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .