சென்னையில் டியூசன் சென்டரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சஞ்சனா டீச்சர் மற்றும் அவரது காதலன் பாலாஜி ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை தி.நகரில் சஞ்சனா டியூஷன் சென்டர் இயங்கி வருகிறது. இங்கு 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், ஒரு மாணவி டியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்தபோது மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார். ஆடைகள் கலைந்த நிலையில் இருந்தது. இதைபார்த்த பெற்றோர் அலறிய படி விசாரித்தனர். அப்போது, டியூசன் சொல்லிக்கொடுக்கும் சஞ்சனா டீச்சர் மற்றும் அவரது ஆண் நண்பர் பாலாஜி (38) ஆகியோர் தன்னை மிரட்டி உடன் படிக்கும் சக மாணவனுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருக்க வைத்து படமும், வீடியோவும் எடுத்ததாக தெரிவித்தார்.

இவருக்கு எதிர் வீட்டில் வசித்து வரும் பாலாஜிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனால், சஞ்சனா வீட்டிற்கு தெரியாமல் தனது காதலனுடன் டியூசன் சென்டரிலேயே அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். சஞ்சனா செக்ஸ் விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். 

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாலாஜி டியூசன் படிக்க வந்த அழகான மாணவிகள் மற்றும் மாணவர்களிடம் விரும்பி பழகி ஆசை வார்த்தைகளை கூறி செக்ஸ் தொடர்பான பிராக்டிக்கல் என்று கூறி மாலையில் டியூசன் முடிந்த உடன் டியூசன் சென்டரிலேயே உள்ள தனி அறையில் மாணவ, மாணவிகளை நிர்வாணப்படுத்தி, ஒன்று சேர வைத்து, அதை தனது ஆண் நண்பர் பாலாஜி செல்போனில் வீடியோ படம் எடுக்க வைத்துள்ளார். 

பின்னர் எடுக்கப்பட்ட மாணவிகளின் வீடியோக்களை சஞ்சனா, பாலாஜியுடன் சேர்ந்து லேப்டாப்பில் அதை பார்த்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் வசதி படைத்த மாணவ, மாணவிகளிடம் பணத்தை பறித்துள்ளார். அப்படி பணம் கொடுக்க முடியாத மற்றும் சம்பவம் குறித்து வீட்டில் சொல்லமுடியாத மாணவிகளிடம் ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி பாலாஜி தனது காதலிக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இது தொடர்பாக சஞ்சனா தன்னை விட்டு காதலன் விலகி சென்று விடுவான் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி தனது காதலனுக்கு மாணவிகளை இறையாக்கிள்ளார். அதில் சம்பந்தபட்ட மாணவி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் சொல்லியதால் இருவரும் தற்போது மாட்டி கொண்டதாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட வீடியோ, ஆபாச புகைப்படங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் டியூசன் சொல்லிக்கொடுக்கும் சஞ்சனா டீச்சர் மற்றும் அவரது ஆண் நண்பர் பாலாஜி ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.