பண்ருட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மாமியாரை மருமகன் கதற கதற பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன்(39). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவரை இழந்த ஜானகிராமனின் மாமியார், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இதை சரியான பயன்படுத்திக் கொண்ட மருமகன் வீட்டுக்குள் நைசாக நுழைந்து அங்குள்ள ஒரு அறையில் பதுங்கிக் கொண்டார். அப்போது, தூங்க சென்ற மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டதால் வாயை பொத்தி அவரை கதற கதற பலாத்காரம் செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது காயமடைந்த  ஜானகிராமனின் மாமியாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜானகிராமனை தேடி வந்தார். போலீசார் தேடுவதை அறிந்த ஜானகிராமன் பயந்து தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.