மாரியப்பன் மீண்டும் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில், பேபி ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்தார். 

நெல்லையில் குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான மாரியப்பன்(30). இவரது மனைவி பேபி ரம்யா(27). இவர்களது மகள் உதயா(6), மகன் அசார் (4). பேபி ரம்யா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால், மனைவியின் நடத்தையில் மாரியப்பன் சந்தேகப்பட்டு தகராறு செய்தார். இதனால் பேபி ரம்யா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து, 2 குழந்தைகளுடன் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் பாரதி நகரில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினார்.

பின்னர் மாரியப்பன் அடிக்கடி மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு கூறி அழைத்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பேபி ரம்யா குழந்தைகளுடன் கணவருடன் சென்றார். பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் கணவரிடம் இருந்து பிரிந்து பேபி ரம்யா குழந்தைகளுடன் தேவிபட்டணத்துக்கு வந்து விட்டார்.

நேற்று காலையில் மாரியப்பன் மீண்டும் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில், பேபி ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்தார். 

இதனைப் பார்த்த குழந்தைகள் அலறி துடித்தனர். அவர்களது சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்து மாரியப்பன் தப்பியோட முயன்றார். உடனே அவரை மடக்கி பிடித்த பொதுமக்கள், இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.