இரண்டு நைட்டுக்கு மட்டும் தான் உல்லாசம்.. 7வது திருமணம் செய்ய முயன்ற பெண் சிக்கிய எப்படி? பரபரப்பு தகவல்.!

6 திருமணங்கள் செய்து மணமகன்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய பெண் 7வது திருமணத்தின் போது வசமாக சிக்கியதை அடுத்து போலீசில் ஒப்படைக்கபட்டார்.

namakkal woman arrested for 7th marriage

6 திருமணங்கள் செய்து மணமகன்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய பெண் 7வது திருமணத்தின் போது வசமாக சிக்கியதை அடுத்து போலீசில் ஒப்படைக்கபட்டார். 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள வெங்கரை அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (35 ).இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (26 ) என்பவருக்கும் கடந்த 7ம் தேதி புதன்கிழமை அன்று கொளக்காட்டுப்புதூர் அருகே உள்ள புதுவெங்கரைஅம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பெண் வீட்டின் சார்பில் அவரது அக்கா, மாமா எனக்கூறி இருவரும், மதுரையைச் சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் (45) என்று 3 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 

namakkal woman arrested for 7th marriage

இந்நிலையில் திருமணத்தை முடித்துவிட்டு பெண் புரோக்கர் பாலமுருகன் திருமண கமிஷன் தொகையாக ரூ.1.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இதனையடுத்து, திருமணம் முடிந்த 2வது நாளில் காலை எழுந்து பார்த்தபோது சந்தியா திடீரென மாயமானார். பல்வேறு பகுதிகளில் தேடியும் காணவில்லை. அவரது செல்போன் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது உறவினர்கள், புரோக்கர் பாலமுருகன் செல்போன் எண்களும் ஆப் செய்யப்பட்டிருந்தன. வீட்டில் பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து, தனபால் பரமத்தி வேலூர் போலீசில் புகார் அளித்தார். 

namakkal woman arrested for 7th marriage

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்ய மணமகளை தேடிய போது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. உடனடியாக உஷாரான தனபால் மற்றும் உறவினர்கள் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமியிடம் (45) பேசி உள்ளனர். மணமகனின் போட்டோவை புரோக்கரிடம் கொடுத்துள்ளனர். அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்து உள்ளது என பேசி போன் மூலமே முடிவு செய்துள்ளனர்.

namakkal woman arrested for 7th marriage

திருமண நாளன்று திருச்செங்கோட்டிற்கு காரில் வந்த சந்தியாவையும், அவர் உடன் வந்த மூவரையும் தனபால் குடும்பத்தினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. மதுரை சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் செய்து வைத்துள்ளனர். தனபாலை அடுத்து ஏழாவதாக திருமணம் நடக்க இருந்த போது சிக்கிக் கொண்டது தெரியவந்தது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு நாள் மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகுவார். இரவில் கணவன் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது சந்தியா உடைமைகளை எடுத்துக்கொண்டு தலை மறைவாகி விடுவார் என்ற அதிரவைக்கும் தகவல் கிடைத்துள்ளது. சந்தியாவை திருமணம் செய்து ஏமாந்தவர்கள் யார்? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios