கம்பம் அருகே பெற்ற மகனை கண்டம் துண்டமாக வெட்டி தலை ஒருபக்கமும்,உடல் வேறுவொரு பக்கமுமாக முல்லைபெரியாறு ஆற்றில் வீசிய கொடூர தாய் பற்றி தான் தேனி மாவட்டம் முழுவதும் பேச்சாக இருக்கிறது. இந்த சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கம்பம் அருகே பெற்ற மகனை கண்டம் துண்டமாக வெட்டி தலை ஒருபக்கமும்,உடல் வேறுவொரு பக்கமுமாக முல்லைபெரியாறு ஆற்றில் வீசிய கொடூர தாய் பற்றி தான் தேனி மாவட்டம் முழுவதும் பேச்சாக இருக்கிறது. இந்த சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். 
இந்த கொலை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது.,

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில், தொட்டமன்துறை தடுப்பணை அருகே முல்லைப்பெரியாற்றில் வாலிபர்கள் சிலர், மீன் பிடித்து கொண்டிருந்தனர். இரவு டூவீலரில் வாலிபர் தாயும் மகனும் அங்கு வந்து சாக்கு மூட்டையில் இருந்த உடலை வீசியிருக்கிறார்கள். கம்பம் தெற்கு போலீஸார் அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள், 30 வயது உடைய வாலிபரின் உடல் இருந்தது. அதில் கை, கால்கள் மற்றும் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. அந்த வாலிபர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. தேனி மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு நேரில் வந்தார். மேலும் தேனியில் இருந்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது.

தடுப்பணையில் இருந்து நாராயணத்தேவன்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்னவாய்க்கால் வரை மோப்ப நாய் ஓடி நின்றது. 
 சாக்கு மூட்டைக்குள் வாலிபரின் உடல் மட்டும் இருந்ததால், அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. அந்த வாலிபரின் கை, கால்கள், தலை எங்கே? என்பதை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த கொலையை கண்டுபிடிக்க தனிப்படை, இன்ஸ்பெக்டர்கள் சிலைமணி, முத்துமணி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டது. கம்பம் நாட்டுக்கல், போக்குவரத்து சிக்னல், காந்தி சிலை, வ.உ.சி. திடல், வாய்க்கால் தெரு, காமயகவுண்டன்பட்டி சாலை, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய இடங்களில் முக்கிய சாலையின் சந்திப்புகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கம்பம், நந்தகோபாலன் கோவில் தெற்கு வாசல்தெருவை சேர்ந்த ராஜா மனைவி செல்வி அவருடைய இளைய மகன் விஜய்பாரத் ஆகியோர் இணைந்து மகனை கொலை செய்தது தெரியவந்தது., கொலையானவர் செல்வியின் மூத்த மகன் விக்னேஷ்வரன். இவர் என்ஜினீயரான. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்துக்காக பெண் பார்த்து வந்தனர். இந்தநிலையில், பெற்ற மகனையே வெட்டி கொலை செய்த சம்பவம் புரியாத புதிராகவே உள்ளது.