மதுரையை அடுத்த மேலூரைச் சேர்ந்தவர் ராகவநத்தம். இவரது மனைவி ரஞ்சிதா . இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர் . ராகவநத்தம் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார் . அவரது மனைவி ரஞ்சிதா 3 குழந்தைகளுடன் மேலூரில் வசித்து வந்திருக்கிறார் .

கடந்த 2016 ம் ஆண்டு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பார்கவி , யுவராஜா ஆகியோர் திடீரென்று இறந்து கிடந்தனர் . தனது குழந்தைகள் தெரியாமல் எலி மருந்தை சாப்பிட்டு இறந்து விட்டதாக ரஞ்சிதா உறவினர்களிடம் கூறி இருக்கிறார் .

ரஞ்சிதாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த கல்யாணகுமார் என்பவருக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது . இதனால்  வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ராகவநத்ததிற்கு குழந்தைகளின் மரணத்தில்  தனது மனைவி ரஞ்சிதா மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது . இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார் . அவர் புகாரின் அடிப்படையில் ரஞ்சிதாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் .

முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய ரஞ்சிதா , காவல்துறையின் கிடுக்குபிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் குழந்தைகளை கள்ளக்காதலன் கல்யாணகுமாரோடு சேர்ந்து விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் . 

இதையடுத்து ரஞ்சிதாவையும் அவரது கள்ளக்காதலன் கல்யாணகுமாரையும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் காவல்துறையினர்  கைது செய்துள்ளனர் .