குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள புத்தன்வீட்டுவிளையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (45). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷீபா (40). இவர்களுக்கு கெபின் (15), கிஷான் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பினால் காலை சற்று சாய்த்தவாறு செல்வர்.

குமரி அருகே குடும்ப தகராறில் இரண்டு மகன்களையும் எரித்துக் கொலை செய்துவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்துள்ள புத்தன்வீட்டுவிளையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (45). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷீபா (40). இவர்களுக்கு கெபின் (15), கிஷான் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பினால் காலை சற்று சாய்த்தவாறு செல்வர்.

இதையும் படிங்க;- மனைவியிடமே மருமகளை படுக்கைக்கு அனுப்புமாறு கேட்ட மாமனார்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சரியாகவில்லை. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏசுதாஸ் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து திரும்பி வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், மனைவி கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு கதவை திறக்கவில்லை. 

இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்! எவ்வளவு சொல்லியும் கேட்காத புருஷன்! அர்ச்சகருக்கு நடந்த ரத்த அபிஷேகம்! நடந்தது என்ன?

இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, 3 பேரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அடுத்தடுத்து 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 2 மகன்களை தீ வைத்து எரித்துக் கொலை செய்துவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.