உத்திரப்பிரதேசத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி  பண்ணையில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். பண்ணையை சுற்றி நிறைய புதர்கள் இருந்திருக்கிறது. அப்போது அங்கிருந்த பாம்பு  வேலை பார்த்த சிறுமியை கடித்து விட்டது. வலியால் அலறி துடித்த சிறுமியை உடனடியாக குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி சேர்த்தனர். 

உடனடியாக சிகிச்சையும் நடைபெற ஆரம்பித்தது. ஆபத்திலிருந்து உயிர் பிழைத்துள்ளார். ஆனால் சிறுமி இன்னமும் ஐசியூவில்தான் இருக்கிறார். 

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரவு ஐசியூ பிரிவில் உள்ள அறையில் சிறுமி தனியாக தூங்கி கொண்டு இருக்கிறாள். ஐசியூ பிரிவில் ஹாஸ்பிடல் கம்பவுண்டர் சுனில் என்பவர் யூனிபார்முடனும் சிறுமி அறைக்குள் நுழைகிறார். அவருடன் வேறு 4 ஆட்கள் என 5 பேருமாக சேர்ந்து சிறுமி அறைக்குள் நுழைந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு ஊசி ஒன்றினை எடுத்து கட்டாயப்படுத்தி போட முயன்றனர். ஆனால் சிறுமியோ அந்த 5 பேரையும் முடிந்தவரை எதிர்த்து போராடி இருக்கிறாள். ஊசி போட முயன்றபோதெல்லாம் கைகளாலேயே தட்டி தட்டி விட்டிருக்கிறாள். இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேரும் சிறுமியை அந்த கட்டிலோடு கட்டிப் போட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். 

இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.  விரைந்த வந்த போலீசாரும் ஐசியூவில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரம் நடைபெற்ற நேரத்தில் ஐசியூ பிரிவில் நிறைய நோயாளிகளும் 3 ஹாஸ்பிடல் ஊழியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு சிறுமி.. அதுவும் பாம்பு கடித்ததால் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை 5 பேரும் கட்டி வைத்து நாசம் செய்தது நாட்டையே அதிர வைத்துள்ளது.