சித்தாள் வேலை செய்யும் கள்ளக்காதலி விஜயாவின் தலையில் மேஸ்திரி கல்லை போட்டு கொன்ற கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெலுக்கனந்தலை சேர்ந்தவர் விஜயா. கணவன் ஞானசேகர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் சித்தாள் வேலை செய்து வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக  வழக்கம் போல வேலைக்கு சென்ற விஜயா சாயங்காலம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் பயந்துபோய் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் விஜயாவை தேடி வந்தனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் குன்றுமேடு காட்டுபகுதியில் விஜயாவின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். அவரது தலையில் யாரோ கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக போலீசார் விசாரணை நடத்தியதில், சந்தேகத்தின் பேரில் அவருடன் வேலை பார்த்த மேஸ்திரி சுப்பிரமணியை கைது செய்தனர். பிறகுதான் தெரியவந்தது, விஜயாவுக்கும் மேஸ்திரி சுப்பிரமணிக்கும்  தகாத உறவு இருந்துள்ளது தெரிகிறது. இதில் விஜயாவின் மகள் மீதும் மேஸ்திரிக்கு ஆசை வந்துவிட்டது. அதனால் மகளை தனக்கு கல்யாணம் செய்து தரவேண்டும் என்று விஜயாவிடமே மேஸ்திரி சுப்பிரமணி கேட்க, அதற்கு இந்த தாய் விஜயாவும் சம்மதம் சொல்லி உள்ளார். 

ஆனால், எதிர்பாராதவிதமாக வேறு ஒரு இடத்தில் மகளை கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டாராம் விஜயா. இதனால்தான் ஆத்திரம் அடைந்து மேஸ்திரி சுப்பிரமணி விஜயாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் தொடர்ந்து மேஸ்திரியை விசாரித்து வருகிறார்கள்.