செலவுக்கு பணம் தராத தந்தையை வெட்டி கொன்ற மகன்; புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது சொந்த தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mentally challenged person killed her own father in pudukkottai district vel

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 55). கம்பி கடை நடத்தி வரும் இவருக்கு இரண்டு மகள், மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. முத்த மகன் இறந்து விட்டார்.  இந்த நிலையில் இவரது கடைசி மகன்  சதீஷ்குமார் (30) பி.இ.பட்டதாரி அயல்நாட்டில் சிறிது காலம் பணியாற்றி விட்டு இந்தியா திரும்பிய சதீஷ்குமார் சிறிது காலம் சென்னையில் பணியாற்றி வந்துள்ளார். 

அரசுப்பள்ளி சுவரில் காவி உடையில் திருவள்ளுவர் படம்; அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு

இவரது அண்ணன் மஞ்சள் காமாலை தாக்கி இறந்துள்ளார். அது முதல் இவருக்கு சற்று மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் பணியாற்றி வந்த இவர் கடந்த ஒன்றரை வருடமாக சொந்த ஊரான பரம்பூருக்கு வந்து தந்தை நடத்தி வரும் இரும்பு கடையில் அவருக்கு துணையாக இருந்துள்ளார். மேலும், மனநலம் பாதிப்புக்கு மாத்திரை உண்டு வந்த அவர் சில நாட்களாக மாத்திரை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளி விழாவில் தனது நண்பனை நினைவுகூர்ந்து தேம்பி அழுத முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

இந்த நிலையில் வீட்டில் இருந்த தந்தை மாதவனிடம் இன்று காலை செலவிற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பணம் தர மறுத்த தந்தை மாதவனை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால் பயந்து வீட்டில் இருந்து வெளியே சாலைக்கு ஓடி வந்த மாதவனை துரத்தி வந்து சதீஷ்குமார் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு சாவகாசமாக வீட்டுக்குள் போய் அமர்ந்து விட்டார். தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த அன்னவாசல் போலீசார் குற்றவாளி சதீஷ் குமாரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மகனே தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் பரம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios