உத்திரப்பிரதேசம், தியோரியா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், காவல் அதிகாரி ஒருவர் புகாரளிக்க வந்த பெண் ஒருவரின் முன்னிலையில் சுயஇன்பம்  அனுபவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தியோரியா பகுதியை சேர்ந்த சேர்ந்த பெண் ஒருவர், நில தகராறு தொடர்பாக புகார் ஒன்றை அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த காவலாளி பெண்மணியின் முன்னிலையில், தனது ஆண்குறி மீது கை வைத்து தவறுதலான செயலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த பெண் அதனை கண்டு கொள்ளாமல் இருப்பதுள்ளார்.

புகார் தொடர்பாக அந்த பெண்ணிற்கு காவல் நிலையம் செல்ல வேண்டியிருந்த நிலையில், அப்போதும் அந்த போலீஸ் அந்த பெண்ணின் முன் சுயஇன்பம் செய்து வந்துள்ளார். போலீஸ் அதிகாரியின் முகம் சுளிக்க வைக்கும் இந்த நடவடிக்கையால், அந்த பெண் அதிர்ந்து போய் அப்பகுதியில் வேறு சில பெண்களிடமும் இது போன்று கீழ்த்தரமாக நடந்து கொண்ட சம்பவம் அந்த பெண்ணிற்கு தெரிய வர, அவர் மேலும் அதிர்ந்து போயிருக்கிறார்.

இதனால் அந்த காவலாளியை சிக்க வைக்க முடிவு செய்த அவர் கேமராவை மறைத்து வைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போதும் அந்த போலீஸ் சுயஇன்பம் செய்ய செய்த நிலையில், அதனை அந்த பெண் வீடியோவாக எடுத்து அந்த நயவஞ்சக காவலரை சிக்க வைத்துள்ளார். 

அந்த வீடியோ வைரலாகி, மிகப்பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதனையடுத்து  சுய இன்பம் கண்ட காவலாளி சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். புகாரளிக்க வந்த பெண்ணின் முன்னிலையில் போலீசின் இது போன்ற கீழ்த்தரமான செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.