பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு... இடையூறாக இருந்த அண்ணணை போட்டு தள்ளிய தங்கை!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 12, Sep 2018, 1:55 PM IST
Many boys illegal love...Brother killed
Highlights

நாகர்கோவில் மேலப் பெருவிளையைச் சேர்ந்தவர் நீலசாமி (43). திருமணம் ஆகாதவர். கல்லூரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நாகர்கோவில் மேலப் பெருவிளையைச் சேர்ந்தவர் நீலசாமி (43). திருமணம் ஆகாதவர். கல்லூரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு வேலையை விட்டு கூலி தொழில் செய்தார். நீலசாமி அதே பகுதியில் உள்ள தனது சகோதரி அமராவதி வீட்டில் தங்கினார். கடந்த சில நாட்களுக்கு நீலசாமி மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

அப்போது, கோட்டவிளையில் உள்ள விவசாய கிணற்றில் கொலை செய்யப்பட்டு நீலசாமி சடலமாக மிதந்தார். அவரது 2 கைகளும் பின்புறம் லுங்கியால் கட்டப்பட்டு கிடந்தது. தகவறிந்து ஆசாரிப்பள்ளம் போலீசார் நீலசாமியின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில்,நீலசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடிபோதை தகராறில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நீலசாமியின் நண்பர்கள், அவருடன் சேர்ந்து மது அருந்துபவர்கள் என பலரிடம் விசாரித்தனர். ஆனால், எந்த தகவலும் இல்லை. இதற்கிடையில், நீலசாமி மாயமானது பற்றி அவரது சகோதரி அமராவதி, போலீசில் எந்தவொரு புகாரும் செய்யாமல் இருந்தார். நீலசாமி சடலம் மீட்கப்பட்டபோது, அவர் தனது, சகோதரர் என அடையாளம் காட்டினார். இதனால் அமராவதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

பின்னர், போலீசார், அமராவதி குறித்து விசாரித்தனர். அதில், அவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் (48) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அதன்பேரில் அமராவதியையும், பிரசாத்தையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அமராவதியும், பிரசாத்தும் திட்டமிட்டு நீலசாமியை கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. அமராவதி கணவரை இழந்தவர். தனிமையில் இருந்த அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத்தும் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். 

பிரசாத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த நெருங்கிய உறவுப்பெண் ஒருவருடன் முறைதவறிய உறவு இருந்துள்ளது. அந்த பெண்ணையும் பிரசாத், அமராவதி வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். இதற்கு அமராவதி துணையாக இருந்துள்ளார். இதுதவிர அமராவதிக்கு சென்னையில் பணியாற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயில் வார்டன் ஒருவருடனும் தொடர்பு இருந்துள்ளது. அவர் ஊருக்கு வரும்போது, அமராவதி வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தார்.

அமராவதியின் நடத்தை சரியில்லாததை அறிந்த நீலசாமி வேதனையடைந்தார். தங்கைக்கு பலமுறை அறிவுரை கூறியும், அவர் கேட்கவில்லை. இதையடுத்து, பிரசாத்தையும் இனி வீட்டுக்கு வரக்கூடாது என எச்சரித்தார். நீலசாமியின் கண்டிப்பால் அமராவதியும், பிரசாத்தும் அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது. தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் நீலசாமியை கொன்று விட்டால் நிம்மதியாக தங்கள் தொடர்பை தொடரலாம் என அமராவதியும், பிரசாத்தும் திட்டமிட்டனர். நீலசாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் அவருக்கு மது வாங்கி கொடுத்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

 

அதன்படி சம்பவத்தன்று நீலசாமிக்கு மது வாங்கி தருவதாக ஆசைக்காட்டிய பிரசாத், கோட்டவிளை பகுதிக்கு அவரை, அழைத்து சென்றார். அங்கு நீலசாமிக்கு மது ஊற்றிக் கொடுத்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்து போதை தலைக்கேறிய நீலசாமியை, பிரசாத் அடித்துக் கொலை செய்தார். பின்னர் நீலசாமி அணிந்திருந்த லுங்கியால் அவரது 2 கைகளையும் பின்புறமாக கட்டி கிணற்றில் வீசி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றார் என போலீசில் வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான பிரசாத்துக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

loader