திருநெல்வேலியைச் சேர்ந்தவர் விக்ரமாதித்ய ராஜா என்கிற ராஜபாண்டி.  இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரைச் சேர்ந்த சித்ரா என்கிற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நெருங்கி பழகி வந்த இவர்கள் நாளைடைவில் தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இதனிடையே ராஜபாண்டியும் சித்ராவும் புதியம்புத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். இருவருக்கும் அவ்வப்போது தகராறு நடந்துள்ளது. ராஜபாண்டி சித்ராவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த சித்ரா, ராஜபாண்டியை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதற்காக ராஜபாண்டியின் ஓட்டுநர் ராமர் மற்றும் அவரது நண்பர்கள உதவியை சித்ரா நாடியுள்ளார். அவர்களும் ராஜபாண்டியை கொலை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டபடி ராஜபாண்டியை கொலை செய்து தலையை துண்டாக வெட்டி எடுத்தனர். பின்னர் தலையை புதியம்புத்தூரில் இருக்கும் கிணற்றில் வீசியுள்ளனர். உடலை தட்டப்பாறையில் இருக்கும் ஒரு குவாரியில் கடந்த மாதம் போட்டுள்ளனர். 

இந்த நிலையில் ராஜபாண்டி மீது கார் திருட்டு உட்பட பல்வேறு வழக்குகள் காவல்துறையில் நிலுவையில் இருக்கிறது. இதன்காரணமாக அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் காவல்துறையினர் அவரது தொலைபேசி எண்ணை சோதனை செய்து பார்த்தனர். அப்போது சித்ரா மற்றும் ராமரிடம் அவர் அதிக நேரம் பேசியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரிடமும் ராஜபாண்டி குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில் தான், ராஜபாண்டியை கொலை செய்த சம்பவம் வெளி வந்தது.

இதையும் படிங்க: ஆளில்லாத தோப்பில் 15 வயது சிறுமிக்கு நடந்த அக்கிரமம்..! பெற்றோர் கதறல்..!

இதைதொடர்ந்து ராஜபாண்டியின் தலையையும் உடலையும் மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். கொலை வழக்கு பதிவு செய்த காவலர்கள், சித்ரா, ராமர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மறைந்த அதிமுக பிரமுகருக்கு திமுக பொதுக்குழுவில் அஞ்சலி..! ஸ்டாலின் அதிரடி..!