மனைவி, அவரது தாய், மற்றும் மனைவியின் சகோதரியான கொழுந்தியா மூவரும் தமக்கு டார்ச்சர் தருவதாக கூறி பேஸ்புக் லைவ் வீடியோவை ஆன் செய்துவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி, அவரது தாய், மற்றும் மனைவியின் சகோதரியான கொழுந்தியா மூவரும் தமக்கு டார்ச்சர் தருவதாக கூறி பேஸ்புக் லைவ் வீடியோவை ஆன் செய்துவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த உதய் பாஸ்கர் என்பவர், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் வசித்து வந்தார். 45 வயதாகும் உதய் பாஸ்கர் 5 வருடங்களுக்கு முன்னர் சோனி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்த உதய் பாஸ்கர் தம்மை அடித்து துண்புறுத்துவதாக அவரது மனைவி சோனி போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் – மனைவி இடையே சண்டை ஏற்பட சோனி அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து மன உளைச்சலில் இருந்த உதய் பாஸ்கர், பேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தமது மனைவி சோனி, அவரது தாயார் மற்றும் சகோதரி டார்ச்சர் செய்வதாக கூறிய உதய் பாஸ்கர், வீடியோ ஓடிக்க்கொண்டிருக்கும் போதே தூக்கு மாட்டிக் கொண்டார்.

வீடியோவை பார்த்து பதறிய நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கு சென்று மீட்பதற்குள் உதய் பாஸ்கர் உயிரிழந்துவிட்டார். மாமியார், கொழுந்தியா கொடுமையால் மருத்துவமனை மேலாளர் தற்கொலை செய்து கொண்டது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.