நாயை ஒருவர் பலாத்காரம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாட்னா அருகே ஒருவர் நாயை பலாத்காரம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பீகார் தலைநகர் பாட்னாவில் நாயை பலாத்காரம் செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததை தொடர்ந்து உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று காவல்துறைக்கு புகார் அளித்துள்ளது. தெரு நாயை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு நபர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஹோலி தினத்தன்று புல்வாரி ஷெரீப்பின் பைசல் காலனியில் மார்ச் 8 அன்று நடந்தது என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததை தொடர்ந்து உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று காவல்துறைக்கு புகார் அளித்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் புல்வாரி ஷெரீப் காவல் நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததை அடுத்து, காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகளில், அந்த நபர் காலனியில் உள்ள நாய் மீது இயற்கைக்கு மாறான செயலைச் செய்வதைக் காணலாம் என்று செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. புல்வாரி ஷெரீஃப் ஏஎஸ்பி மணீஷ் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமையின் அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்படும் என்றார். நாயை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்