மனைவிக்கு பாலில் மயக்க மருந்து கலந்துகொடுத்த சத்தியமூர்த்தி, அவர் மயங்கிய பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துவிட்டு தப்பினான்.

மனைவிக்கு பாலில் மயக்க மருந்து கலந்துகொடுத்த சத்தியமூர்த்தி, அவர் மயங்கிய பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துவிட்டு தப்பினான்.

திருப்பத்தூர்மாவட்டம்புதுபூங்குளத்தைச்சேர்ந்தவர்சத்தியமூர்த்தி. கடந்த 3 ஆண்டுகளுக்குமுன்புசத்தியமூர்த்திக்கும்கொட்டாவூர்பகுதியைச்சேர்ந்ததிவ்யாவுக்கும்திருமணம்நடந்துள்ளது. இத்தம்பதிக்குவர்ஷினிஎன்கிறபெண்குழந்தைஉள்ளது. கணவன் -மனைவிஇருவருக்கும்இடையேஅடிக்கடிதகராறுஏற்பட்டுவந்ததால் திவ்யா தமது தாயார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 25-ம் தேதி மனைவியை பார்க்கச் சென்ற சத்தியமூர்த்தி, அவரை கோவிலுக்கு அழைத்துள்ளார்.

கணவரை நம்பி உடன் சென்ற திவ்யாவுக்கு, பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்த சத்தியமூர்த்தி, அவர் மயங்கியதும் எலவம்பட்டிவட்டாரப்போக்குவரத்துஅலுவலகத்திற்குஅருகேதூக்கிசென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். உடல் முழுவதும் தீயுடன் அங்கும் இங்கும் ஓடிய திவ்யாவை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் திருப்பத்தூர் மருத்துவமனையில் திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே மனைவி கொலை குறித்து உறவினர்களுக்கு வாட்ஸாப் மூலம் வீடியோ பதிவு ஒன்றை சத்தியமூர்த்தி அனுப்பியிருந்தார். அதில், தமக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. எங்களால்இனிவாழமுடியாது என்பதால் மனைவியைகொன்றுவிட்டுநானும்தற்கொலைசெய்துகொள்ளபோகிறேன். என்னைதேடாதீர்கள் என்று கூறிவிட்டு மாயமானார். சத்தியமூர்த்தியை போலீஸ் தேடிவரும் நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியைக் கொன்ற சத்தியமூர்த்தியுடன் போரூரில் நர்சிங் படித்துவந்த 20 வயது மாணவியும் மாயமாகி உள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துளார். இதையடுத்து சத்தியமூர்த்தி தப்பிச் சென்ற காரை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மனைவியை எரித்துக்கொன்று சிறுநீரகம் செயழிலந்து விட்டதாக நாடகமாடிய கணவன், கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்துள்ளதால் அது திட்டமிட்ட கொலை என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.