சென்னை பல்லாவரத்தில் மதுபோதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஒருவர் தூங்கும் போது மற்றொருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பல்லாவரத்தில் மதுபோதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஒருவர் தூங்கும் போது மற்றொருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது நண்பரான பல்லாவரத்தை சேர்ந்த சின்னதுரை என்பவருடன் சேர்ந்து பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு சென்னை பல்லாவரம் சாலையில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையின் முன்பு மது அருந்தியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: 108 முறை என்னுடன் உடலுறவு கொண்டால் பேய் ஓடிவிடும்.. ஆசிரமத்தில் பெண்ணை அலறவிட்ட போலி சாமியார் !

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா தனது நண்பர் சின்னதுரை தூங்கும் வரை காத்திருந்து அவர் தூங்கிய பின் கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டார். இதை அடுத்து மறுநாள் காலை சென்னை பல்லாவரம் காவல் நிலையத்தில் நடந்ததை கூறி ராஜா சரணடைந்தார்.

இதையும் படிங்க: 10 வருஷம் முன்னாடியே என்ன நாசம் பண்ணாரு இப்ப என் தங்கச்சிய.. செ*** சைகோவாக மாறிய தந்தை மீது மகள் புகார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் சின்னதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ராஜாவிடம் விசாரணை செய்து வருகின்றனர். முன்னதாக அந்த வழியாக சென்றவர்கள், சின்னதுரை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.