கோவை மாவட்டம் பச்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் திருஞானம்(59). நகை தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் உடல்நலக்குறைவால் மரமடைந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக திருஞானம் நாமக்கல் வந்திருந்த நிலையில் அங்கு தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே உறவினர் ஒருவரின் 4 வயது குழந்தை பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விளையாடி கொண்டிருந்தது.

சிறுமியுடன் பேச்சுக்கொடுத்த திருஞானம் பானுவை தூக்கி கொஞ்சியிருக்கிறார். அப்போது சிறுமிக்கு திருஞானம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பெற்றோரிடம் சென்ற சிறுமி திருஞானம் செய்தவற்றை அழுது கொண்டே கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருஞானத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின் அவர் மீது நாமக்கல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி நாமக்கல்லில் இருக்கும் அரசு மருத்துவமனையில் திருஞானம் சேர்ந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அவரை மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர். இதனால் மருத்துவமனையிலும் போலீசார் பாதுகாப்பில் இருக்கின்றனர். அவர் டிஸ்சார்ஜ் ஆகும் பட்சத்தில் உடனடியாக கைது செய்ய இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துவிட்டு மருத்துவமனையில் போய் பதுங்கிக்கொண்ட திருஞானத்தின் மீது உறவினர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

Also Read: அடுத்தடுத்து தூக்கில் பிணமாக தொங்கிய இளம் தம்பதி..! பரிதவிக்கும் ஒன்றரை வயது குழந்தை..!