Asianet News TamilAsianet News Tamil

ம.பி.யில் நாய்க்குட்டியைக் தரையில் வீசி காலால் நசுக்கிக் கொன்ற நபர்!

முதல்வரும் சவுகானும் மத்திய அமைச்சர் சிந்தியாவும் தலையிட்ட பின்பு, வீடியோவில் இருப்பவர் குணா மாவட்டத்தில் உள்ள ராதாபூர் காலனியில் வசிக்கும் மிருத்யுஞ்சய் ஜடான் என்று அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

Man crushes puppy to death underfoot in MP; CM Shivraj and Scindia react strongly sgb
Author
First Published Dec 10, 2023, 2:58 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் நாய்க்குட்டியை ஒருவர் இரக்கமின்றி நசுக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அறிந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமையன்று இந்த சம்பவத்தின் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியது. அதில் ஒரு நபர் நாய்க்குட்டியை தரையில் தூக்கி எறிந்து, காலடியில் நசுக்கிக் கொல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. நாயைக் கொடூரமாகக் கொல்லும் அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வரும் சவுகானும் மத்திய அமைச்சர் சிந்தியாவும் தலையிட்ட பின்பு, வீடியோவில் இருப்பவர் குணா மாவட்டத்தில் உள்ள ராதாபூர் காலனியில் வசிக்கும் மிருத்யுஞ்சய் ஜடான் என்று அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஒரே ஒரு நபர் இருந்தாலும் ரூ.6000 நிவாரண தொகை உண்டு: தமிழக அரசு விளக்கம்!

Man crushes puppy to death underfoot in MP; CM Shivraj and Scindia react strongly sgb

குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கடைக்கு வெளியே அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தபோது இரண்டு நாய்க்குட்டிகள் அவரை அணுகியதாக, அதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஒரு நாய்க்குட்டியை தரையில் வீசிஒ காலடியில் நசுக்கிக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது பின்னர் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "இந்தத் திகிலூட்டும் வீடியோ கவலை அளிக்கிறது. இந்த காட்டுமிராண்டித்தனத்திற்காக அந்த மனிதன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று கூறியிருக்கிறார். அவர் தனது பதிவுடன் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை டேக் செய்திருந்தார்.

முதல்வர் சவுகான், “இந்த பயங்கரமான சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். பொறுப்பான நபர் முதலில் இதன் விளைவுகளை சந்திப்பார்” என்று கூறினார்.

Nudify என்று தேடும் நெட்டிசன்ஸ்... ஆபாசப் படங்களை உருவாக்க உதவும் Deepfake ஆப்ஸ் பயன்பாடு அதிகரிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios