Asianet News TamilAsianet News Tamil

விதவைப் பெண் டாக்டர்கள்... அளவில்லா பணம், ஆசை தீர உல்லாசம் ! பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னனை தூக்கிய க்ரைம் போலீஸ்

திருமண தகவல் இணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன் திருச்சி மத்திய சிறையில் சக்கரவர்த்தி இருப்பதை  அறிந்த குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Man cheats woman doc promising marriage, held
Author
Thiruvannamalai, First Published Jun 22, 2019, 1:15 PM IST

கடந்த மே 17-ம் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வசிக்கும் அரசு பெண் டாக்டரை தமிழ் மேட்டரிமோனியில் தகவல் மையம் மூலமாக திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பாலியல் வல்லுணர்வு செய்தும் அவரிடம் இருந்த ரூபாய் 20 லட்சத்தை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்ச ஏற்படுத்திய நிலையில், சென்னையில் பெண் பெண் டாக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையை சேர்ந்த காதல் மன்னன்  சக்கரவர்த்தி மத்திய க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்ட சக்ரவர்த்தி பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் பெண்களின் ஆசையை தூண்டி அவர்களை தனது வலையில் விழ வைத்து கோடிக்கணக்கில் ஆட்டையை போட்டது அம்பலமானது, அதற்காக திருமண தகவல் மையத்தில் பல பெயர்களில் வித விதமாக போட்டோ போட்டு பதிவு செய்துள்ளார். இவர் பணக்கார பெண்களான விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் கணவனை இழந்த விதவைகளுக்கு கல்யாண ஆசை காட்டி அவர்களை வலை வீசி அவர்களிடம் இருந்து பல கோடி பணத்தை பறித்துக்கொண்டு, பலாத்காரம் செய்து ஏமாற்றிய வந்துள்ளார். 

சக்ரவர்த்திக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் முருகனையும் கைது செய்தனர். இருவரையும் விசாரித்ததில் கணவனால் கைவிடப்பட்ட, விதவை பெண்களாக பார்த்து வலை வீசி உடல் ரீதியாக நெருங்கி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்தும், பணம் நகை வாங்குவதே வேலையாக சக்கரவர்த்தி இருந்துள்ளார். நகை பணம் மட்டும் பறித்தல் சொல்லிவிடுவார்கள் என்பதால் உடல் ரீதியாக தொடர்பு வைத்தால் வெளியே சொல்லமாட்டார்கள் என பல பெண் டாக்டர்களை ஏமாற்றியிருப்பதும் தெரிகிறது.

இந்நிலையில் சென்னையிலுள்ள ஒரு பெண் டாக்டர் கொடுத்த புகாரில், திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமாகி பழகிய அவர், வாஷிங்டனில் டாக்டராக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்து விட்டதாகக் கூறி சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி ஒன்றிற்கு வரவழைத்து திருமணம் செய்து கொள்வதுபோல் பேசி ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார். 

திருச்சி மத்திய சிறையில் சக்கரவர்த்தி இருப்பதை அறிந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக 4 நாட்கள் போலீஸ் காவலில் சக்கரவர்த்தியை எடுத்து விசாரித்தனர். விசாரணை செய்ததில் அவர் பல பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியது.
 
இதேபோல, தமிழகம் முழுவதும் சுமார் 9-க்கும் மேற்பட்ட பெண்களை  ஏமாற்றி சுமார் 9 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இவரின் குறி  திருமணமாகாத மருத்துவம், எஞ்சினியரிங் பட்டதாரி பெண்களையும், குறிப்பாக பணக்கார விதவை பெண்களையும் குறிவைத்து மோசடி செய்தும், உல்லாசம் அனுபவித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

இதே போல கடந்த  2014-ம் ஆண்டு பல பெண்களை ஏமாற்றி அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது .மேலும் சக்கரவர்த்திக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இப்படி  மோசடி செய்த பணத்தை வைத்து திருவண்ணாமலை, வேலூர் விழுப்புரம் ,உள்ளிட்ட பகுதிகளில் ஆடம்பர பங்களாக்களும் சொகுசு கார்களும் வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும், இவர் தனது கல்யாண வலையில் எத்தனை பெண்களை வீழ்த்தினார் என்பது மோசடி குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios