செங்கல்பட்டு அருகே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுரேஷ் அந்த வழியாக வரவே போலீசார் அவரை சோதனை செய்தனர். அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். சுரேஷ் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  நெடுங்குன்றத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவா் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தனக்கு தீா்ப்பாயம் வழங்க உத்தரவிட்டுள்ள ரூ. 4.37 லட்சம் இழப்பீட்டுத்தொகையை அதிகரிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். அது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் மனுதாரருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு ரூ.67.35 லட்சமாக இழப்பீட்டுத்தொகை உயா்த்தி வழங்க உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், நாட்டில் நடக்கும் சாலை விபத்துகள் மட்டுமின்றி மனிதாபிமானற்ற கொடூர குற்றங்களுக்கும் மதுபோதை தான் மூலக் காரணமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகவும் மது தான் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுபோதையால் ஏற்பட்ட வாகன விபத்துகளில் இதுவரை பல அப்பாவிகள் இறந்துள்ளனா்.

அலறவிடும் கொரோனா..! அதிரடி நடவடிக்கையால் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த பிரதமர் மோடி..!

மோட்டாா் வாகன சட்டம்-1988 பிரிவு 202-இன் படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்களை கைது செய்ய சட்டப்படி வழிவகை உள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவா்களை சீருடை அணிந்த போலீஸாா் சட்டப்படி கைது செய்து, பிரிவு 203 பிரகாரம் அவா்களை சோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதன்பிறகு அவா்களின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மேலும் மாதம்தோறும் குடிபோதை தொடா்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்..? விரைவில் அறிவிப்பு..!