Asianet News TamilAsianet News Tamil

ஆமாம் நாங்க ஒரு வருஷமா ரொம்ப க்ளோஸா இருக்கோம்... கணவர் உயிருடன் இருந்த போதே கள்ளக்காதல்... உண்மையை சொன்ன நந்தினி!!

ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் மைனா நந்தினி, முதல் காதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் , தனது கணவர் இறப்பதற்கு முன்பே இரண்டாவதாக கல்யாணம் செய்யவுள்ள யோகேஷோடு ரொம்ப க்ளோஸா இருப்பதாக பேட்டியில் கூறியள்ளதால் ரசிகர்கள் கழுவி கழுவி ஊத்தும் சம்பவம் நடந்துள்ளது .

maina nandhini exclusive interview about her new boyfriend
Author
Chennai, First Published Jun 12, 2019, 12:28 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் மைனா நந்தினி, முதல் காதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் , தனது கணவர் இறப்பதற்கு முன்பே இரண்டாவதாக கல்யாணம் செய்யவுள்ள யோகேஷோடு ரொம்ப க்ளோஸா இருப்பதாக பேட்டியில் கூறியள்ளதால் ரசிகர்கள் கழுவி கழுவி ஊத்தும் சம்பவம் நடந்துள்ளது .

வம்சம் படத்தில் அறிமுகமானவர் நந்தினி விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடர்மூலம் பிரபலமான மைனா நந்தினி, சென்னையில் ஜிம் நடத்தி வந்த  கார்த்திகேயன் என்பவரை  திருமணம் செய்து, இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.  இருவருக்குள்  கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். பின்னர் நந்தினி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென ஒருநாள் கணவன் கார்த்திகேயன் லாட்ஜ் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.   

maina nandhini exclusive interview about her new boyfriend

கணவர் இறந்த விஷயம் அறிந்தும் கூட நந்தினி கணவரின் உடலைப் பார்க்கச் செல்லவில்லை, கணவர் இறந்ததை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத நந்தினி, தொடர்ந்து தனது கணவர் இறந்த சில நாட்களிலேயே அவர் மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கத் தொடங்கினார். 

ஒரு வழியாக இந்தப் பிரச்சனைகள் முடிவிற்கு வந்தாலும் கணவர் இறந்து 6 மாதம் கூட ஆகாத நிலையில் பிரபல தொலைக்காட்சியில் இவர் மிகவும் மாடர்ன்னாக வந்து குத்தாட்டம் போட்டது அனைத்து தரப்பு ரசிகர்களையும் விமர்சிக்க வைத்தது. இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவலையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

maina nandhini exclusive interview about her new boyfriend

இதைப்பற்றி நந்தினி, எனக்கு யோகேஷை 2013-ல இருந்தே தெரியும். ஆனா கடைசி ஒரு வருஷமா தான் ரொம்ப க்ளோஸா இருக்கோம். உனக்குன்னு ஒரு லைஃப் வேணாமா, நடந்ததெல்லாம் மறந்துட்டு கடந்து போன்னு சொன்னாங்க. ஆனா எப்போவும் என் கிட்ட கேரிங்கா இருப்பாங்க. சோ நான் ஒரு நல்ல ஃபிரெண்டா தான் நினைச்சிட்டு இருந்தேன். திடீரென்று கடந்த ஜனவரி மாசம் அவங்க அப்பா, அம்மா என்ன பார்க்க வந்தவங்க, உன்னை பொண்ணு கேட்டு வந்திருக்கோம்ன்னு சொன்னாங்க. எனக்கு பயங்கர ஷாக். ரெண்டு வீட்லயும் பேசிருக்காங்க. கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என்றார்.

maina nandhini exclusive interview about her new boyfriend

கணவர் இறப்பதற்கு முன்பு ஆறு மாத காலம் வரை எந்தவித தொடர்பும் இன்றி பிரிந்தோம் திருமண திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை, ஒரு பெண்ணாக எனக்கும் உணர்ச்சிகள் இருக்கிறதல்லவா? என அவரின் பேட்டியும், இவரது காதல் கணவர் உயிருடன் இருந்தபோதே வேறு ஒரு நபருடன் காதல் வசப்பட்டு இருந்ததை வெளிப்படையாக தெரிவித்த  மைனாவின் இந்த பேட்டியை பார்த்த பலரும் கணவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அது எப்படி ஒரு வருஷத்துக்கு மேலே காதலிக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios