இந்த பாழாப்போன கள்ளக்காதலால் தூங்கிக்கொண்டிருந்த கணவனை கணவனை, கால்களை கட்டி போட்டு, கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி, மிளகாய்ப் பொடியை கண்ணில் தூவி... சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் மனைவி.  

இந்த நாசமா போன கள்ளக்காதலால் தூங்கிக்கொண்டிருந்த கணவனை கணவனை, கால்களை கட்டி போட்டு, கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி, மிளகாய்ப் பொடியை கண்ணில் தூவி... சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் மனைவி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அசாம் மாநிலத்தை சேர்ந்த பாவிஷ்யா பர்ஹகோஹைன் - குவின்சியா, கடந்த 5 வருஷத்துக்கு முன்பு காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள். 

பாவிஷ்யா, பவாயில் உள்ள கால் சென்டரில் வேலை செய்து வந்தபோது, மும்பையை அடுத்த வசாய் அருகே நைகாவில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். அந்த சமயத்தில் சத்விர் நாயர் என்ற இளைஞருடன் குவின்சியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, மெஹந்தி போடும் வேலை பார்க்கும் அந்த இளைஞருடன் இந்த பழக்கம் தகாத உறவாக மாறியுள்ளதால் அந்த இளைஞரை தேடி அவரது வீட்டிற்கே செல்வாராம். இந்த விஷயம், கணவனுக்கு இது தெரிந்ததும், மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் கேட்பதாக இல்லை.

இதனால் வீட்டை காலி செய்து விட்டு வசாய் பகுதிக்கு, பிரதாப்கட் சொசைட்டியில் வீடு வாடகை எடுத்து குடியேறினார். ஆனால் கள்ளக் காதலன் சத்விரும் அதே பகுதிக்கு வந்து குடியேறினார். இதனால் தம்பதிக்குள் சண்டை வெடிக்க ஆரம்பித்தது. இப்படித்தான் சம்பவத்தன்றும் சண்டை வந்தது. பிறகு தூங்க போய்விட்டார். ஆனாலும் கள்ளக் காதலை பிரிக்க நினைக்கும் கணவன் மீது பயங்கர கோபத்தில் இருந்த குவின்சியா, கணவனை கொல்ல முடிவு செய்து. கள்ளக் காதலனை போன் போட்டு வீட்டுக்கு வர வழைத்துள்ளார். 

தூங்கிக் கொண்டிருந்த பாவிஷ்யாவின் துணிகளை முதலில் கழட்டினர். கால்கள் இரண்டையும் கட்டினர். கொதிக்கும் எண்ணெய்யை அவருடைய உடல் மீது ஊற்றினர். மிளகாய்ப் பொடியை கண்ணில் தூவினர். பிறகு சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்தனர். உடலில் கரன்ட் ஷாக்கூட கொடுத்தனர்! 

வலி தாங்காமல் பாவிஷ்யா அலறி, கையில் கிடைத்த குக்கர் உள்ளிட்ட பாத்திரங்களை தூக்கி இந்த கள்ளக்காதல் ஜோடி மீது வேகமாக வீசியுள்ளார். ஆனால் அவை இவர்கள் மீது படாமல், ஜன்னல் வழியாக வெளியே போய் விழுந்துவிட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்து, உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள். 

போலீசார் வருவதற்குள் வீடே அமைதியாக இருந்தது. இந்த ஜோடி அமைதியாக சோபாவில் கூலாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் இரண்டும் கதறி அழுதவாறே இருந்தனர். பாவிஷ்யா பாத்ரூமில் வைத்து பூட்டப்பட்டு கிடந்தார். இதையடுத்து கதவை உடைத்து சென்ற போலீசார் படுகாயங்களுடன் விழுந்து கிடந்த பாவிஷ்யாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் குழந்தைகளை குவின்சியாவின் சொந்தக்காரர்களிடமும் ஒப்படைத்து விட்டு இந்த ஜோடியை போலீசார் கைது செய்து,கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் உயிருக்கு போராடும் பாவிஷ்யாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.