பாளையங்கோட்டை இலந்தைகுளம்என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான மரியபுஷ்ப ராஜ்.  ஆட்டோ ஓட்டுகிறார். இவருக்கு  டிக்-டாக் ஆப் மூலம் மதுரையை சேர்ந்த சங்கீதா என்பவர் 20 வயசான சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் டிக் டாக் மூலம் உருகி உருகி காதலித்து வந்துள்ளனர். சங்கீதாவை மரியபுஷ்பத்துக்கு அளவுக்கு அதிகமாகவே பிடித்து போய் விட்டது. சில மாதங்கள் போனில் பேசி காதலித்த இவர்கள்  நேரில் சந்திக்க பிளான் போட்டனர். தொடர்ந்து இருவரும் வாரா வாரம் ஊர் விட்டு ஊர் சென்று லாட்ஜ், ஹோட்டல்களில் தங்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனால் சங்கீதா கர்ப்பமானார். 

கர்ப்பம் வீட்டிற்கு தெரிந்ததால்,  சீக்கிரமா தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி சங்கீதா  கேட்டுள்ளார். சங்கீதாவை மறக்க முடியாமல் தவித்த மரிய புஷ்பம், அவர் வீட்டில் சென்றுபேசி, பெற்றோரை சம்மதிக்கவும் செய்து விட்டார். சில நாட்களுக்குப் பின் சங்கீதா வீட்டுக்கு தனது சொந்தக்காரர்களுடன் பெண் கேட்க சென்றார் மரிய புஷ்பத்திற்கு காத்திருந்தது அதிர்ச்சி. 

அதாவது, சங்கீதாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதாம், அதுமட்டுமல்ல ஒரு குழந்தையும் உள்ளதாம். ஆனால் கணவனோடு சண்டை வந்ததால் புருஷனை பிரிந்து வாழ்கிறாராம். இதைக் கேட்டதுமே மரிய புஷ்பராஜ் செம ஷாக் ஆனாராம். இதனால் சோகமாகவே இருந்துள்ளார். இப்படிபொய் சொல்லி  சங்கீதா நம்மள ஏமாத்திட்டாளே... என்ற வேதனை தாங்க முடியாத அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து வி‌ஷத்தை குடித்துள்ளார். 

இதைக் கண்ட உறவினர்கள், உயிருக்கு போராடிய மரிய புஷ்பத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இப்போது அவர்  தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த விஷயம் கேள்விப்பட்டு  காதலனை பார்க்க மருத்துவமனைக்கு வந்த சங்கீதா, சிகிச்சையில் இருந்த மரிய புஷ்பத்தை பார்த்துவிட்டு, மதுரைக்கு பஸ் ஏற நெல்லை பஸ் ஸ்டேண்ட் வந்த அவர், விஷத்தை குடித்து அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள்  அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.