பரபரப்பு சம்பவம்..! சரக் சரக்கென காதலிக்கு 12 குத்து..! லேசாக அறுத்துக்கொண்ட காதலன் ..! 

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்.. காதலுக்கு எல்லையே இல்லாமல் சென்றுவிட்டது என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது கர்னாடக மாநிலத்தில் நடைபெற்ற ஓர் அதிர்ச்சி சம்பவம்.

ஆம்... கர்நாடக  மாநிலம் மங்களூருவில் எம்பிஏ படித்து வந்த  தீக் ஷா என்ற பெண்ணும், அதே பகுதியில் பள்ளி வகுப்பை பதியிலியேயே முடித்துக்கொண்டு நடன பயிற்சியாளராக இருந்து வந்த சுகந்த் என்பவரும் கடந்த 4 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். அனால் இவர்களின் காதல் விபரீதமாக மாறி உள்ளது.

தீக்ஷா மற்றும் சுகந்த் காதல் வாழ்க்கையில், சுகத்தின் சில நடவடிக்கை மற்றும் நண்பர்களுடனான தீய பழக்க வழக்கம் காரணமாக, கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பாகவே சுகந்த் உடனான காதலை முடித்துக்கொண்டு உள்ளார் தீக்ஷா.பின்னர் விடாது துரத்திய, சுகந்த் ஒரு கட்டத்தில் தீக்ஷாவிடம் கோபமாக நடந்துகொண்டும், போகும் போதும் வரும் போதும் பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி சுகந்த் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தீக்ஷா கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது வழிமறித்து, தான் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு சரமாரியாக குத்தி உள்ளார். தீக்ஷாவின் மார்பு வயிறு மற்றும் கால் என 12 இடங்களில் கத்தியால் சரமாரியாக  குத்தியதால் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து துடி துடிக்கும் காட்சியை பார்க்க முடிகிறது. பின்னர் சுகந்தும் தன் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொள்கிறான். இருந்தாலும் காதலனுக்கு உயிருக்கு ஆபத்தாகும் அளவிற்கு எங்த காயமும் ஏற்பட வில்லை. காதலி தீக்ஷா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். காதல் குறித்த புரிதலே இல்லாமல், படிக்கும் வயதில் பெற்றோர்கள் சொல்வதை கேட்காமல் நடந்துகொள்ளும் இன்றைய இளைஞர்களுக்கு இதெல்லாம் ஒரு பாடம் .