கன்னியாகுமரியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும், ஆவரைக்குளத்தைச் சேர்ந்த எசுநேசன் என்ற இளைஞருக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இது சில மாதங்களுக்கு பின்னர், இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து மாணவியை காதலிப்பதாக கூறிய ஏசுநேசன், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என கூறினார். 

அதன்படி, மாணவியை சந்தித்த ஏசுநேசன், அவரை ஆற்றங்கரை பள்ளிவாசலில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை மிரட்டி ஏசுநேசனும், அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்களிடம் மாணவி கூறியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏசுநேசனையும், அவரது நண்பரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில தினங்களாகவே பெண் காதலிக்கவில்லை என்றால் அவர்களை கொலை செய்வது. காதலிப்பது போல் நடித்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது.