சிறைக்குள் கம்பி எண்ணச்சென்ற ரவுடி, பெண் டாக்டரை தனது காதல் வலையில் வீழ்த்தி மன்மத சாம்ராஜ்ஜியம் நடத்தி வருவதால் சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

 

2004ம் ஆண்டு திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா வாக்கிங் சென்றபோது வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில், ராஜாஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜா, மதுரையை சேர்ந்த ரவுடிகளான வேல்துரை, பென்னி என்கிற பெனடிக்ட் என்கிற அருண், ஆட்டோ பாஸ்கர், பாலமுருகன், அழகர் என்கிற வளர்ந்த அழகர், ராஜ் என்கிற ஆறுமுகம், கண்ணன் என்கிற காரகண்ணன், பரமசிவன், அர்ஜுனன், தனசிங், ரவி என்கிற டாக் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த ரவுடி வளர்ந்த அழகர். இவருக்கு முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பிறகு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட அழகர் சிறைக்குள்ளும் ரவுடித்தனத்தைக் காட்ட, அங்கும் எதிரிகள் உருவாகினர். அழகர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சென்னை, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறைக்குள் இருக்கும் மருத்துவமனைக்கு, உடம்பு சரியில்லை என அடிக்கடி போய் வந்திருக்கிறார் அழகர். அவரது நடத்தை சிறைத்துறை காவலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சந்தேகத்தின் பேரின் விசாரிக்க, அழகரின் கள்ளக்காதல் லீலை வெட்டவெளிச்சமாகி உள்ளது. சிறை மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவரை காதல் வலையில் வீழ்த்தியது அறிந்து அதிர்ச்சியாகி இருக்கிறார்கள் அதிகாரிகள். 

இதனையடுத்து அடுத்து ரவுடி வளர்ந்த அழகரை பற்றி காதல் மயக்கத்தில் இருந்த பெண் டாக்டரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவரது காதலில் உறுதியாக இருக்கிறாராம். இதில் வேடிக்கை என்னவென்றால் இருவருக்குமே திருமணமாகி குடும்பம் குட்டிகள் இருக்கிறது.  ஆனாலும் ரவுடியுனான காதல் கிறக்கத்தில் பெண் டாக்டர் இந்த உலகத்தையே மறந்து விட்டார் என்கிறார்கள். 

ஆம்பூர் பிரியாணி மதுரை நாய்க்குத்தான் கிடைக்கும் என்றால் என்ன செய்வது..?