திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுதாகர் (28). இவர் ஆரணி அருகே உள்ள ஒண்டி குடிசை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகளை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் சம்மதிக்கவில்லை. ஆகையால், 6 மாதத்திற்கு முன்பு திருப்பதியில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். 

ஆரணி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுதாகர் (28). இவர் ஆரணி அருகே உள்ள ஒண்டி குடிசை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகளை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் சம்மதிக்கவில்லை. ஆகையால், 6 மாதத்திற்கு முன்பு திருப்பதியில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். 

இதனையடுத்து, அவர்களை கண்டுபிடித்து பஞ்சாயத்து செய்து இருவரையும் பிரித்து வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சுதாகர், இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் சுதாகரை கண்டித்தும் கேட்காததால் அவரை இரும்பு ராடால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுதாகர்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் சம்மந்தப்பட்ட மூர்த்தி, கதிரவன் ஆகியோரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.