Asianet News TamilAsianet News Tamil

சினிமா பாணியில் பயங்கரம்... வழக்கறிஞரை ஓட ஓட விரட்டிய கும்பல்... வெறி தீர துடிதுடிக்க வெட்டி படுகொலை..!

தேனி மாவட்டம், கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (42). உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மனைவி ரேணுகா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கம்பத்தில் வசித்த ரஞ்சித்குமார் உத்தமபாளையம்  நீதிமன்றத்துக்கு தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வந்தார்

lawyer murder...police investigation
Author
Theni, First Published Mar 7, 2020, 1:25 PM IST

கம்பம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் பொதுமக்கள் மத்தியில் ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம், கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (42). உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மனைவி ரேணுகா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கம்பத்தில் வசித்த ரஞ்சித்குமார் உத்தமபாளையம்  நீதிமன்றத்துக்கு தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வந்தார்.

இதையும் படிங்க;- 63 வயது கிழவியுடன் கள்ளக்காதல்... உல்லாசத்திற்கு தடையாக இருந்த தாய்க்கு நேர்ந்த பகீர் சம்பவம்..!

lawyer murder...police investigation

இந்நிலையில், நேற்று மாலை நீதிமன்ற பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ரஞ்சித்குமார் சென்ற இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்து மோதியது. இதில், நிலைகுலைந்து கீழே விழுந்த ரஞ்சித்குமாரை காரில் இருந்து இறங்கிய கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் போக்குவரத்து மிகுந்த பகுதியில் சினிபா பாணியில் ஓட ஓட விரட்டி ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- நாளை திருமணம்... பார்ட்டி வைக்காத புதுமாப்பிள்ளை கொடூர கொலை... தென்காசியில் பதற்றம்..!

lawyer murder...police investigation

இதுதொடர்பாக உடனே உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிவப்பு நிற காரில் வந்த கும்பல் ரஞ்சித்குமாரை வெட்டி கொன்று தப்பியது தெரிய வந்தது. இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios