களக்காதலுக்காக தூக்க மாத்திரை கொடுத்து தாயை கொடூரமாக கொலை செய்த வழக்கில் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் காலனி மாரியப்பன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி நல்லம்மாள்(65). இவருக்கு சிவக்குமார்(47) என்ற மகனும் லதா என்ற மகளும் உள்ளனர். சிவக்குமாருக்கு திருமணமாகவில்லை. லதாவிற்கு திருமணமாகி காமராஜர் காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் நல்லம்மால் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது வாயில் துணியை வைத்து அமுக்கியிருந்தனர். தாய்க்கு சாப்பாடு கொடுக்க சென்ற லதா இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, மூதாட்டி நல்லம்மாளின் மகன் சிவக்குமார் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் தனது தாயை கொலை செய்ததாக சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தனது தாய் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் இருந்த அவர் தனது கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து படுக்க வைத்தேன். பிறகு வாயிலும், மூக்கிலும் சேலை துணியால் இறுக்கி கொலை செய்தேன் என கூறினார்.

இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பலர் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், சிவக்குமாருக்கும் சேலம் அம்மாபேட்டை திருவிக பாதையை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தாரின் மனைவி ஜெயலட்சுமி என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அடிக்கடி சிவக்குமாரின் வீட்டிற்கு ஜெயலட்சுமி வந்து சென்றுள்ளார். 

அப்போது, உல்லாசத்திற்கு நல்லம்மாள் தடையாக இருந்மதால்  அவரை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தனர். அதன்படியே நேற்று மதியம் இருவரும் சேர்ந்து நல்லம்மாளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து பின் வாயிலும் மூக்கிலும் சேலையை அமுக்கி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, சிவக்குமார் மற்றும் அவரது கள்ளக்காதலி ஜெயலட்சுமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.