பட்டப்பகலில் பாமக பிரமுகர் வெட்டி படுகொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சோழபுரத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (53). விவசாயி. இவர் பாமக முன்னாள் பேரூர் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி வனிதா (42). இவர்களுக்கு ஸ்ரீராம் (25) என்ற மகனும், ஸ்ரீமதி (22) என்ற மகளும் உள்ளனர்.

land dispute... pmk personalities murder in kumbakonam

கும்பகோணம் அருகே பாமக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சோழபுரத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (53). விவசாயி. இவர் பாமக முன்னாள் பேரூர் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி வனிதா (42). இவர்களுக்கு ஸ்ரீராம் (25) என்ற மகனும், ஸ்ரீமதி (22) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் பல ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இதையும் படிங்க;- முனகல் சத்தம்.. அரை நிர்வாணத்தில் அண்ணியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?

land dispute... pmk personalities murder in kumbakonam

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தகராறில், திருஞானசம்பந்தத்தை ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக திருஞானசம்பந்தம் கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரன் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இருவரும் அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய  திருஞானசம்பந்தம் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். 

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த  திருஞானசம்பந்தத்தை வழிமறித்த ராஜேந்திரன், மணிகண்டன் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இதையும் படிங்க;-  எனக்கு இன்னும் அடங்கல! ஒன்ஸ்மோர் கேட்ட கள்ளக்காதலன்! மறுத்த கள்ளக்காதலி! இறுதியில் காட்டில் நடந்தது என்ன?

land dispute... pmk personalities murder in kumbakonam

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சோழபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள தந்தை மற்றும் மகனை போலீசார் தேடி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios