கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 6.5 பவுன் தங்கம் மற்றும் 11.5 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கோவை காந்திபுரம் ராம்நகர் பகுதியைச்சேரந்த சுப்ரமணிய ஐயர் என்பவரது மகன் கோபால். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டநிலையில் இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதும், வீட்டிற்குள் பொருட்கள் சிதறிகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.மேலும் பீரோவிலிருந்த பொருட்கள் சிதறி காணப்பட்டதுடன் அதிலிருந்த 6.5 பவுன் தங்கம்,11.5 கிலோ வெள்ளி மற்றும் 15,000 ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

இதனயடுத்து இச்சம்பவம் குறித்து காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி தங்க நகைகளை கொள்ளயடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.