Kodaikanal: பாலியல் வழக்கில் 4 நாளில் தீர்ப்பு வழங்கிய கொடைக்கானல் நீதிமன்றம்
கொடைக்கானலில் உள்ள நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கை நான்கே நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொடைக்கானல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நான்கே நாட்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த 28 வயதாகும் பெண் ஒருவர் அப்பகுதியில் தங்கும் விடுதி நடத்திவருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி 7 பணி அளவில் கொடைக்கானலில் இருந்து விடுதிக்குத் திரும்பியுள்ளார். காரில் வந்த வரை மன்னவனூரைச் சேர்ந்த ஜீவா (22) மற்றும் பூண்டியைச் சேர்ந்த பாலமுருகன் (26) ஆகிய இருவரும் வழியில் நிறுத்தி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியுள்ளானர்.
இதுகுறித்து அந்தப் பெண் கொடைக்கானல் காவல்துறையில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை விரைவாக ஜீவா மற்றும் பாலமுருகன் இருவரையும் கைது செய்தது. இது தொடர்பான வழக்கு பிப்ரவரி 10ஆம் தேதி கொடைக்கானல் இரண்டாவது நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விரைவாக நடைபெற்ற விசாரணையைஅடுத்து நீதித்துறை நடுவர் கே. கார்த்திக் பிப்ரவரி 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
மனைவி மீது சந்தேகம்.. பிச்சைக்காரர் வேடத்தில் பின் தொடர்ந்து 56 வயது பேராசிரியர் செய்த காரியம்.!
மதுரையில் சிறுமிக்கு தாலி கட்ட நினைத்த தாத்தா, குடும்பம் நடத்திய சித்தப்பா, ரூட்டு போட்ட தாய் கைது
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 323, 354 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகளான ஜீவா, முருகன் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய நடுவர் கே. கார்த்திக், "நம் சமூகமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். பெண்கள் பாதுகாப்பாக உணரும் வகையில் ஒவ்வொரு ஆணும் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்" என்றும் அறிவுறுத்தினார்.
இதில் குறிப்பிடத்தக்க செய்தியாக இவ்வழக்கில் மிக விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 4வது நாளிலும், குற்றம் நிகழ்ந்த 9வது நாளிலும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைத்துள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக நீதித்துறையின் செயல்பாடு அமைந்திருப்பது பாராட்டுக்கு உரியது.